ADVERTISEMENT

விதிகளை மீறிய சாயப்பட்டறைக்கு சீல்; 6 லட்சம் ரூபாய் அபராதம்!

05:03 PM Jul 02, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சேலத்தில், சாயக்கழிவு நீரை சுத்திகரிக்காமல் சாக்கடைக் கால்வாயில் திறந்துவிட்ட சாயப்பட்டறையை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூடி சீல் வைத்தது. 6 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

சேலம் கொண்டலாம்பட்டி, சீலநாயக்கன்பட்டி, கருங்கல்பட்டி, களரம்பட்டி, ஏ.ஆண்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி சாயப்பட்டறைகள் இயங்கி வருவதாகவும், அவற்றின் சாயக்கழிவு நீர் ஓடைகளில் திறந்து விடப்படுவதாகவும் சேலம் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு புகார்கள் சென்றன. அதன்பேரில், அதிகாரிகள் குழுவினர் சாயப்பட்டறைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஏ.ஆண்டிப்பட்டி பகுதியில் உள்ள ஒரு சாயப்பட்டறையிலிருந்து சாயக்கழிவு நீரை, சாக்கடை காய்வாய் ஓடையில் திறந்து விடப்படுவதும், சுத்திகரிப்பு பணிகளை மேற்கொள்ளாமல் இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அந்த சாயப்பட்டறை உடனடியாக மூடி சீல் வைக்கப்பட்டது. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. அந்த ஆலையின் உரிமையாளருக்கு 6 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


மாவட்டச் சுற்றுச்சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், ''மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்ற சாயப்பட்டறைகள், கழிவுநீரை வெளியேற்றினால் தொழிற்சாலையின் உரிமம் ரத்து செய்யப்படும். விதிகளை மீறி செயல்படும் ஆலைகளுக்கு அபராதம் விதிக்கப்படும். சாயப்பட்டறை உரிமையாளர்கள், சுத்திகரிப்பு நிலைய திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT