ADVERTISEMENT

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை...  5 மாதத்திற்கு பின் தலைமை ஆசிரியர் கைது!

11:52 PM Mar 04, 2020 | kalaimohan

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தலைமை ஆசிரியர் ஏறக்குறைய ஐந்து மாதங்களுக்குப் பிறகு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அம்பேத்கர் நகர் புதிய வீதியை சேர்ந்தவர் சேர்ந்தவர் ஜான் கென்னடி. 51 வயதான இவர் இதே அம்பேதகர் நகரிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் எட்டாம் வகுப்பு ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் பாடம் எடுக்கும் போது பள்ளி மாணவிகளிடம் பாலியல் ரீதியான தொந்தரவுகள் அளித்ததாகக் கூறப்பட, மாணவிகளின் பெற்றொர்கள் நேரடியாக பள்ளிக்கே சென்று தலைமை ஆசிரியர் ஜான்கென்னடியை கண்டித்ததால், பள்ளி நிர்வாகமோ அவரை தண்டிக்காமல் அருகிலுள்ள மற்றொரு கிராமத்துப் பள்ளிக்கு மாற்றியதாக கூறப்படுகிது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இவருடைய பாலியல் சீண்டல்களை தெரிந்த அக்கிராம மக்களோ, "இப்பொழுது இருக்கின்ற தலைமை ஆசிரியரே எங்களுக்குப் போதும். எங்களுக்கு அவர் வேன்டாம்." எனக்கூறி போராட்டமே நடத்தியுள்ளனர். இதேவேளையில், ஐந்து மாதங்கள் கடந்தும் பாலியல் சீண்டல் செய்த தலைமை ஆசிரியரை தண்டிக்காததைக் கண்டித்து மாவட்ட கல்வி அலுவலருக்கு ரகசிய தகவல் அனுப்பியுள்ளனர் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள். இதுக்குறித்து மாவட்ட கல்வி அலுவலர் சம்பத்குமார் சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரை தொடர்ந்து போலீசார் மாணவிகளிடம் ரகசியமாக விசாரணை மேற்கொள்ள, ஜான் கென்னடி தலைமை ஆசிரியராக இருந்த நேரத்தில் பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு அளித்தாக நிருபணமானது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த சங்கரன்கோவில் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் தலைமை ஆசிரியர் ஜான் கென்னடியை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT