ADVERTISEMENT

அடுத்த தேர்தலில் மகளுக்காக சத்யராஜ் பிரச்சாரம்?

01:19 PM Dec 16, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சத்யராஜ் மகள் திவ்யா பிரபலமான ஊட்டச்சத்து நிபுணர் இவர் கரோனா நேரத்தில் தமிழ் மக்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவை இலவசமாக வழங்க ‘மகிழ்மதி’ என்ற இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார். சில வருடங்களுக்கு முன் மருத்துவத் துறையில் நடக்கும் முறைகேடுகள் பற்றியும் நீட் தேர்வை எதிர்த்தும் திவ்யா சத்யராஜ் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. கொரோனா நேரத்தில் பெரும் இழப்புகளைச் சந்தித்த விவசாயிகளுக்கு நேரடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று திவ்யா விவசாயத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

திவ்யா அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தவுடன் அடுத்த தேர்தலில் சத்யராஜ் மகளுக்கு பிரச்சாரம் செய்வார் என்று செய்தி பரவி வருகிறது. சத்யராஜ் மிகச் சிறந்த புரட்சிகரமான பேச்சாளர் என்பது எல்லோருக்கும் தெரியும். இதைப் பற்றிக் கேட்க திவ்யாவைத் தொடர்பு கொண்டோம், “அப்பா என் உயிர்த் தோழன், என் அரசியல் பாதையில் என்னுடன் கைகோர்த்து நிற்பார். ஆனால் ஒரு முக்கியமான விஷயம், நான் ஒரு சுயாதீனமான நபர், சொந்த வளர்ச்சிக்காக ஒருபோதும் அப்பாவின் புகழை உபயோகிக்க மாட்டேன்” என்று திவ்யா சத்யராஜ் கூறினார்.

“என் குழந்தைகள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ள தகப்பன் நான். என் மகளை தைரியமான பெண்ணாக வளர்த்து இருக்கிறேன். ஒரு ஊட்டச்சத்து நிபுணராக திவ்யாவின் வெற்றியை நினைத்துப் பெருமைப்படுகிறேன். திவ்யாவின் அரசியல் பாதையிலும் ஒரு தகப்பனாகவும் நண்பனாகவும் என் மகளுக்கு பக்க பலமாக இருப்பேன். நிச்சயம் என் மகளுக்காகப் பிரச்சாரம் செய்வேன்.” என்று சத்யராஜ் தெரிவித்திருக்கிறார்.



ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT