/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sathyaraj_3.jpg)
நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி, பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், அசோக் செல்வன், கருணாகரன் ஆகியோரின் நடிப்பில் வெளியான படம் 'சூது கவ்வும்'. 2013-ஆம் ஆண்டு வெளியான இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது.
'யங் மங் சங்' படத்தின் இயக்குனர் எம்.எஸ்.அர்ஜுன் இப்படத்தினை இயக்க, தயாரிப்பாளர் சி.வி.குமார் தயாரிக்கிறார். பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் முன்தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், பிப்ரவரியில் படப்பிடிப்பைத் துவக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)