Veetla Vishesham movie first look poster and release date out now

தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான ஆர்.ஜே.பாலாஜிஎல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களில் நடித்து கதாநாயகனாகவும்அவதாரம் எடுத்தார். இப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது இந்தியில் வெற்றி பெற்ற‘பதாய் ஹோ’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி ஆகியோர் படத்தின்முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை 'வீட்லவிசேஷங்க' என்ற பெயரில் ஆர்.ஜே பாலாஜிஇயக்கவும் செய்கிறார். இப்படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

Advertisment

இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு, அத்துடன் ரிலீஸ்தேதியையும் அறிவித்துள்ளது. அதன்படி, 'வீட்ல விசேஷங்க' திரைப்படம் ஜூன் மாதம் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தைத்தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி பிரபல மலையாள இயக்குநர்ஜியன் கிருஷ்ணகுமார் தமிழில் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

Advertisment