ADVERTISEMENT

சத்யபிரியா கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

10:07 PM Oct 14, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை கிண்டியை அடுத்துள்ள ஆதம்பாக்கம் ராஜா தெரு, காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் சத்யா. இவர் தி.நகரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.காம் படித்துவந்துள்ளார். அதே ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஸ் என்ற இளைஞர் சத்யாவை ஒருதலையாக காதலித்து வந்த நிலையில் தொடர்ந்து சதீஷின் காதலை சத்யா ஏற்க மறுத்து வந்துள்ளார். நேற்று மதியம் 1.30 மணியளவில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது சதீஸ் அப்பெண்ணை ஆத்திரத்தில் ரயில்வே ட்ராக்கில் தள்ளிவிட்டுள்ளான்.

அப்பொழுது மின்சார ரயில் சத்யாவின் மீது மோதி சம்பவ இடத்திலேயே இளம்பெண் தலை துண்டாகி உயிரிழந்தார். மாணவியின் தந்தை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது மேலும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக துரைப்பாக்கம் பகுதியில் கைது செய்யப்பட்ட இளைஞர் சதீஸ் தற்பொழுது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் சதீஸிற்கு வரும் 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படுவதற்கான முக்கியமான நோக்கம் வழக்கை பொறுத்த அளவில் (302) கொலை என்ற சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் மேலும் கூடுதலான ஆதாரங்களை திரட்டுவதற்கும், தொழில்நுட்ப ரீதியான ஆதாரங்களை திரட்டுவதற்கும் சிபிசிஐடி போன்ற புலனாய்வு குழுக்களை அனுப்ப வேண்டும். அப்பொழுதுதான் அதிகபட்ச தண்டனையைக் குற்றவாளிக்கு பெற்றுத்தர முடியும் என்ற அடிப்படையில் இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT