'I do with a plan'- Satish's confession in the Satya  case

கடந்த 13 ஆம் தேதி சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் பட்டப்பகலில் மாணவி சத்யப்ரியா என்பவர் சதீஷ் என்ற இளைஞரால் ரயில்வே தண்டவாளத்தில் தள்ளி விடப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.மேலும் இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மாணவியின் தந்தையும் மாரடைப்பால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.

Advertisment

சென்னை கிண்டியை அடுத்த ஆதம்பாக்கம் ராஜா தெரு, காவலர் குடியிருப்பைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு பி.காம் படித்த மாணவி சத்யபிரியா. ஒருதலைக் காதல் விவகாரத்தில் சதீஷ் என்ற இளைஞர் சத்யாவை கடந்த 13 ஆம் தேதி மதியம் 1.30 மணியளவில் ரயில்வே ட்ராக்கில் தள்ளி விட்டதில் சத்யா சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார். கொலையில் ஈடுபட்ட சதீஷ் என்ற இளைஞரை போலீசார் கைது செய்த நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் தற்போது விசாரித்து வருகின்றனர்.

தொடர்ந்து சதீஷை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டமிட்ட சிபிசிஐடி போலீசார் சென்னை புழல் சிறையிலிருந்து பாதுகாப்பாக சதீஷை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதன் பிறகு எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டான். சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்துப் பல்வேறு விசாரணைகள் அவனிடம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் மாணவியை திட்டமிட்டே ரயில் முன் தள்ளி கொலை செய்ததாக சிபிசிஐடி விசாரணையில் சதீஷ் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Advertisment

சத்யாவை அவர் படித்தகல்லூரியின் வாசலுக்கேசென்று தாக்கியதாக காவல் நிலையத்தில் புகாரளித்தபோது கூட எனக்கு அவரைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை. ஆனால் அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க அவரது வீட்டில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது அறிந்து அவரைக் கொல்ல வேண்டும் எனத்திட்டமிட்டேன் என்றும், இதற்காக இரண்டு நாட்கள் சத்யாவை பின் தொடர்ந்து சென்றேன் என்றும் சதீஷ் வாக்குமூலம் அளித்துள்ளதாகதகவல்கள் வெளியாகியுள்ளது.