ADVERTISEMENT

மணல் கடத்தி சென்ற 26 லாரிகள் பறிமுதல்

12:10 PM Sep 10, 2018 | sundarapandiyan


உரிய ஆவணமின்றி சென்னைக்கு மணல் ஏற்றிச் சென்ற 26 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ADVERTISEMENT


நாகை, திருவாரூர் மாவட்ட பகுதிகளிலிருந்து சவுட்டு மணல் என்று அனுமதி வாங்கி ஆற்று மணலை ஏராளமான லாரிகளில் அடிக்க்கடி கடத்தப்படுவதாக கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் சரவணனுக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து மணல் கடத்தலை தடுக்க எஸ்.பி மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களுக்கு கடுமையான உத்தவிட்டுள்ளார். அதையடுத்து மாவட்டத்திலுள்ள காவல்துறையினர் அவரவர் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது நாகப்பட்டினம் மாவட்டம், வேடங்குடி பகுதியிலிருந்து சென்னைக்கு ஏராளமான லாரிகள் மூலம் ஆற்று மணல் ஏற்றி செல்லப்படுவதாக காவல்துறையினர்க்கு ரகசிய தகவல் வந்தது.

அதையடுத்து குறிஞ்சிப்பாடி - பாலூர் சாலை, குறிஞ்சிப்பாடி - ஆடூர் அகரம் சாலை ஆகிய சாலைகளில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது வரிசையாக சில லாரிகள் வந்து கொண்டிருந்தன. காவல்துறையினர் அவற்றை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் மணல் லாரிகள் உரிய ஆவணங்கள் இன்றி ஆற்று மணல் எடுத்து வந்தது தெரியவந்தது. அதனால் காவல்துறையினர் 26 லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.

அத்துடன் லாரிகளின ஓட்டுனர்கள் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள கரையனூரை சேர்ந்த குமார்(எ)ரத்தினகுமார், ஈஸ்வரி கிராமத்தை சேர்ந்த ஏழுமலை(38), படலாம் பழைய காலணியை சேர்ந்த ரவி(36), திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த பெருமாள்(38), ஆத்தூரை சேர்ந்த ஜெயபால்(36), ஜெயக்குமார்(36), செங்கல்பட்டு அருகிலுள்ள அ.பள்ளிமேட்டை சேர்ந்த கன்னியப்பன்(39), சிங்கப்பெருமாள் கோயிலை சேர்ந்த செந்தில்குமார்(39), திண்டிவனம் சாலை மடத்தை சேர்ந்த சக்திவேல்(32), விலங்கம்பாடியை சேர்ந்த கோபால்(38), செங்கல்பட்டு அருகேயுள்ள அஜ்மீர் தர்காவை சேர்ந்த சுரேஷ்(28), செஞ்சி வட்டம், காட்டுசித்தாமூரை சேர்ந்த பிரகாஷ்(30) ஆகிய 12 லாரி ஓட்டுநர்களையும் கைது செய்தனர்.

மேலும் சோதனையின்போது லாரியை விட்டுவிட்டு, தப்பியோடிய காஞ்சிபுரம் மாவட்டம் பூதூரை சேர்ந்த ஜெகதீசன், வில்லியம்பாக்கத்தை சேர்ந்த பன்னீர், விக்கிரவாண்டியை சேர்ந்த பாண்டியன், காஞ்சிபுரம் மாவட்டம் உள்ளாஊரை சேர்ந்த வேலு, கூடுவாஞ்சேரியை சேர்ந்த மாணிக்கம், திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த மணி, முள்ளிக்கொளத்தூரை சேர்ந்த விநாயகமூர்த்தி, ஊரப்பாக்கத்தை சேர்ந்த சேகர், செங்கல்பட்டு வட்டம் அஞ்சூர் கொல்லை சரவணன், மலையம்பாக்கம் திருநாவுக்கரசு, பிலாந்தூர் நம்பிராஜன், அஜ்மீர் தர்காவை சேர்ந்த சோமு, மதுராந்தகம் ஜவகர், சேலத்தை சேர்ந்த மாயவேல், அஞ்ஜூர் புதிய காலணியை சேர்ந்த வீரராகவன், மலையம்பாக்கம் பூபதி, நித்தியானந்தம் உள்ளிட்டவர்களை தேடி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT