ADVERTISEMENT

அடுத்தடுத்து கைவரிசை; கொள்ளையன் மீது பாய்ந்த குண்டர் சட்டம்

04:54 PM Jul 12, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த 2017 ஆம் ஆண்டு சேலம் அருகே உள்ள அயோத்தியா பட்டினத்தை சேர்ந்த ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.3000 பறித்த வழக்கில் சசி என்கிற மோட்டார் சசி கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து இந்த வழக்கில் பிணையில் விடுதலையாகி வெளியே வந்த சசி கடந்த ஜூன் 16 ஆம் தேதி சேலம் வள்ளுவர் நகரைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் மணியனூர் சந்தை அருகே நடந்து சென்றபோது, அவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, ரூ. 70 ஆயிரம் மதிப்பிலான 2 பவுன் சங்கிலி, ரூ. 700 பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டார். அதன் பிறகு அன்றைய தினமே சசியும் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்திற்கு முதல் நாளும் சசி திருமலை ரயில்வே கிராசிங்கில் ஒருவரிடம் கத்தி முனையில் 700 ரூபாய் பணம் பறித்து இருப்பதும் தெரியவந்தது. கொள்ளையன் சசிகுமார் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததோடு, பொது அமைதியை சீர்குலைக்கும் விதமாகவும் நடந்து வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்த இரும்பாலை காவல் ஆய்வாளர், மாநகர துணை ஆணையர் லாவண்யா ஆகியோர் பரிந்துரை செய்தனர்.

அதை ஏற்றுக்கொண்ட சேலம் மாநகர காவல்துறை ஆணையர் பிரவீன்குமார் அபிநபு (பொறுப்பு), சசிகுமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் காவல்துறையினர் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகுமாரிடம், குண்டர் சட்ட கைது ஆணை சார்வு செய்யப்பட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT