ADVERTISEMENT

சேலத்தில் சனிக்கிழமைகளில் கரோனா தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்!

07:34 AM Dec 04, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சேலத்தில், சனிக்கிழமைதோறும் கரோனா நோய் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

சேலம் மாநகராட்சி நிர்வாகம், கரோனா நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கடந்த நவ. 28- ஆம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் கரோனா பரிசோதனைக்கான சிறப்பு மருத்துவ முகாம்களை, காவேரி மருத்துவமனையுடன் இணைந்து நடத்தி வருகிறது.

இந்நிலையில், நடப்பு டிசம்பர் மாதத்திற்கான சிறப்பு முகாம் நடக்கும் பட்டியல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, டிசம்பர் 5- ஆம் தேதி (சனிக்கிழமை) அம்மாபேட்டை மண்டலம் 9- வது வார்டில் வசிக்கும் மக்களுக்கு அல்லிக்குட்டை, தாதம்பட்டி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாமும், அஸ்தம்பட்டி மண்டலம் 6- வது வார்டு மக்களுக்கு காந்தி நகர் ஐசிடிஎஸ் பகுதியில் உள்ள சித்த மருத்துவ முகாமும், சூரமங்கலம் மண்டலம் 1- வது வார்டு மக்களுக்கு ஜாகிர் காமிநாயக்கன்பட்டி மாநகராட்சி துவக்கப்பள்ளியில் இயற்கை மருத்துவ முகாமும் நடைபெறும்.

டிச. 12- ஆம் தேதி, கொண்டலாம்பட்டி மண்டலம் 54- வது வார்டு மக்களுக்கு சண்முகா நகர் மாரியம்மன் கோயில் வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாமும்; அம்மாபேட்டை மண்டலம் 42- வது வார்டு மக்களுக்கு காசிலட்சுமி கல்யாண மண்டபத்தில் சித்த மருத்துவ முகாமும், அஸ்தம்பட்டி மண்டலம் 5- வது வார்டு மக்களுக்கு பெரிய புதூர், குமரன் நகர் அருணகிரி மெட்ரிக் பள்ளியில் இயற்கை மருத்துவ முகாமும் நடைபெறும்.

டிச. 19- ஆம் தேதி, சூரமங்கலம் மண்டலம் 1- வது வார்டு மக்களுக்கு காமிநாயக்கன்பட்டி பள்ளி வளாகத்தில் மருத்துவ முகாமும், கொண்டலாம்பட்டி மண்டலம் 45- வது வார்டு மக்களுக்கு எஸ்எம்சி லைன் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் சித்த மருத்துவ முகாமும், அம்மாபேட்டை மண்டலம் 10- வது வர்டு மக்களுக்கு புத்து மாரியம்மன் கோயில் தெரு மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் இயற்கை மருத்துவ முகாமும் நடைபெறும்.

டிச. 26- ஆம் தேதி, அஸ்தம்பட்டி மண்டலம் 7- வது வார்டு மக்களுக்கு நாகப்பன் முதன்மை சாலை அய்யன்துரை மாளிகையில் மருத்துவ முகாமும், சூரமங்கலம் மண்டலம் 2- வது வார்டு மக்களுக்கு பெரியம்பாளையம் மாரியம்மன் கோயில் அருகே உள்ள ஐசிடிஎஸ் மையத்தில் சித்த மருத்துவ முகாமும், கொண்டலாம்பட்டி மண்டலம் 51- வது வார்டு மக்களுக்கு ரங்காபுரம் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் இயற்கை மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகிறது" இவ்வாறு சேலம் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT