ADVERTISEMENT

சேலம் : ஒரு லட்சம் வீடுகளில் கரோனா பரிசோதனை ! 

08:00 AM Apr 07, 2020 | santhoshb@nakk…


சேலம் மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் வீடுகளில் கரோனா வைரஸ் தொற்று குறித்து மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டத்தில் ஆரம்பத்தில் ஒரே ஒருவருக்குமே மட்டுமே கரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்தோனேஷியாவில் இருந்து சேலம் வந்த முஸ்லிம் மத போதர்கள் குழுவைச் சேர்ந்த 11 பேரைப் பரிசோதனை செய்ததில் அவர்களில் 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. அவர்களுக்கு வழிகாட்டியாகச் செயல்பட்ட சென்னையைச் சேர்ந்த நபருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபர்களுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் தனிமை வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT


இதற்கிடையே, இந்தோனேஷிய குழுவினர் மத போதனையில் ஈடுபட்ட கிச்சிப்பாளையம், சன்னியாசிக்குண்டு, களரம்பட்டி, செவ்வாய்ப்பேட்டை, அம்மாபேட்டை, பொன்னம்மாபேட்டை, சூரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 25 ஆயிரம் பேருக்கு நோய்த்தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

ADVERTISEMENT


சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 19 வார்டுகள், சேலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சன்னியாசிகுண்டு, களரம்பட்டி, எருமாபாளையம், தாரமங்கலம், மேட்டூர், சேலம் கேம்ப், தம்மம்பட்டி ஆகிய பகுதிகள் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று ஏற்படாமல் கட்டுப்படுத்தும் பகுதிகளாக 5 கி.மீ. தூரம் வரை வரையறுக்கப்பட்டு உள்ளது.

இப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு கரோனா தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 500 மருத்துவக் குழுவினர் மற்றும் அனைத்து துறை பணியாளர்கள் வீடுகள்தோறும் நேரில் சென்று சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் உள்ளதா என ஆய்வு செய்து விவரங்கள் சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 19 வார்டுகளில் 60 ஆயிரம் வீடுகள், சன்னியாசிகுண்டு, எருமாபாளையம் பகுதிகளில் 4 ஆயிரம் வீடுகள், தாரமங்கலத்தில் 11 ஆயிரம் வீடுகள், சேலம் கேம்ப்பில் 11300 வீடுகள், தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, கொண்டையம்பள்ளி, நாகியம்பட்டி, ஜெ.சமுத்திரம் உள்ளிட்ட கிராமங்களில் 11340 வீடுகள் என மொத்தம் 97640 வீடுகளில் உள்ளவர்களிடம் சளி, காய்ச்சல், சுவாசக்கோளாறுகள் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.இதில் பெரும்பாலான வீடுகளில் இப்பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது.


இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில்,சேலம் மாவட்டத்தில் 12 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் தனிமை வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.சேலம் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட இடங்களில் 500-க்கும் மேற்பட்ட மருத்துவக் குழுவினர் சுமார் ஒரு லட்சம் வீடுகளில் நேரடியாகச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்து விவரங்களைச் சேகரித்து வருகின்றனர்.

அப்பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இப்பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்குப் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இப்பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT