ADVERTISEMENT

'சேலத்தில் இரண்டு நாட்களுக்கு முழுமையான ஊரடங்கு'- மாவட்ட ஆட்சியர் ராமன் அறிவிப்பு!

12:58 PM Apr 24, 2020 | santhoshb@nakk…


கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இருந்த போதிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனால் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. ஊரடங்கை மீறுபவர்களுக்கு அபராதம், வழக்குப் பதிவு, வாகனங்கள் பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை காவல்துறையினர் எடுத்து வருகின்றனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


இந்த நிலையில் சேலத்தில் இன்று (24/04/2020) மதியம் 01.00 மணிமுதல் திங்கள்கிழமை (27/04/2020) வரை முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் "சமூகத் தொற்றாக மாறாமல் இருக்க சில கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. சேலத்தில் வாகனங்கள் மூலம் காய்கறி போன்ற பொருட்கள் விற்கப்படும். இரண்டு நாட்கள் வீட்டை விட்டு மக்கள் வெளியே வரக்கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை, மருந்தகங்கள் போன்றவை மட்டுமே இரண்டு நாட்களுக்கு இயங்கும். ஊரடங்கை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் நேற்று (23/04/2020) புதிதாக ஐந்து பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியான நிலையில் முழு ஊரடங்கை அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT