ADVERTISEMENT

சேலம்: கர்ப்பிணிகள், முதியோர், ஆதரவற்றோருக்கு உதவி மைய எண்கள் அறிவிப்பு; உணவு, மருந்து வீடு தேடி வரும்!

07:40 AM Mar 27, 2020 | santhoshb@nakk…

சேலத்தில் கர்ப்பிணிகள், முதியோர், ஆதரவற்றோர் ஆகியோருக்கு உணவு, மருந்து பொருள்கள் உரிய நேரத்தில் வழங்குவதற்கு வசதியாக, வருவாய்த்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொள்வதற்காக உதவி மைய எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. கரோனா தொடர்பான உதவிகளைப் பெற, தகவல்கள் சொல்ல பொதுமக்களும் இந்த உதவி மைய எண்களைப் பயன்படுத்திக் கொள்ளளாம்.

ADVERTISEMENT


தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், கர்ப்பிணி பெண்கள், முதியோர், ஆதரவற்றோர் ஆகியோர் உணவு, மருந்து உள்ளிட்ட அவசரத் தேவைகளுக்கு உதவி செய்வதற்காக மேட்டூர் வருவாய்க் கோட்டாட்சியர், சேலம், சங்ககிரி, ஆத்தூர் வருவாய்க் கோட்டாட்சியர்கள் மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள 13 வருவாய் வட்டாட்சியர்கள் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

ADVERTISEMENT

மேட்டூர் வருவாய்க் கோட்டத்திற்கு உட்பட்டவர்கள் மேட்டூர் ஆர்டிஓ சரவணனை 9445000435 என்ற எண்ணிலும், சேலம் வருவாய்க் கோட்டத்திற்கு உட்பட்டவர்கள் ஆர்டிஓ மாறனை 9445000433 என்ற எண்ணிலும், சங்ககிரி வருவாய்க் கோட்டத்திற்கு உட்பட்டவர்கள் ஆர்டிஓ அமிர்தலிங்கத்தை 9445000436 என்ற எண்ணிலும், ஆத்தூர் வருவாய்க் கோட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆர்டிஓ துரையை 9445000434 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

அதேபோல் வட்டாட்சியர்களின் எண்களும் உதவி மைய தொடர்புக்காக அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி, சேலம் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன்- 9445000547, சேலம் மேற்கு வட்டாட்சியர் பிரகாஷ்- 9842000547, சேலம் தெற்கு வட்டாட்சியர் ரமேஷ்குமார்- 8838877459, வாழப்பாடி வட்டாட்சியர் ஜானகி- 9445000549, ஏற்காடு வட்டாட்சியர் ரமணி- 9445000548, பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் வெங்கடேசன் - 9443892286 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

ஆத்தூர் வட்டாட்சியர் பிரகாஷ்- 9445000550, கெங்கவல்லி வட்டாட்சியர் சிவக்கொழுந்து- 9445000551, சங்ககிரி வட்டாட்சியர் பாலாஜி- 9445000554, எடப்பாடி வட்டாட்சியர் கோவிந்தராஜன்- 9445000556, மேட்டூர் வட்டாட்சியர் சுமதி - 9445000552, ஓமலூர் வட்டாட்சியர் கணேஷ்குமார்- 9445000553, காடையாம்பட்டி வட்டாட்சியர் அன்னபூரண - 9488421106 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், கர்ப்பிணி பெண்கள், முதியோர், ஆதரவற்றோர் உள்ளிட்டோர் உணவு, மருந்து உள்ளிட்ட அவசரத்தேவைக்காக மேற்குறிப்பிட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்த வருவாய்த்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT