ADVERTISEMENT

ஆளும் கட்சியினரின் மணல் கொள்ளையை ஒத்துழைக்காத டி.ஐ.ஜி. டிரான்ஸ்பர்!

04:14 PM Jul 02, 2020 | rajavel


ADVERTISEMENT

ADVERTISEMENT

திருச்சி மத்திய மண்டலத்தின் டிஜஜியாக இருந்தவர் பாலகிருஷ்ணன். இவர் வந்த பிறகுதான் பொதுமக்கள் நேரடியாக குறைகளை சொல்லவும், அதற்கான நியாமும் கிடைக்க ஆரம்பித்தது. இதனால் பொதுமக்கள் புகார் மனுக்கள் கொடுக்க ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் ஆன்லைனில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் புகார் வாங்கி அதிரடியாக நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தார். இந்த அதிரடி நடவடிக்கையில் தவறு செய்யும் அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்தார். இதனால் மக்கள் மத்தியில் நல்லபெயரும் சட்டம் ஒழுங்கும் மிகச்சிறப்பான முறையில் இருந்தது.

காவிரி டெல்டா பகுதியில் மணல் கொள்ளை அதிகம் நடைபெற்று வந்தது. ஆனால் அவர் வந்த பிறகு மணல் கொள்ளைக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து சிறையில் அடைத்தார். கடந்த 1 வாரத்தில் திருச்சியில் மட்டும் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டது. இதனால் மணல் கொள்ளையர்கள் இவரை மாற்றுவதற்கு முயற்சிகள் செய்து கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் இவர் அதிரடியாக மாற்றப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் இவரை பணி இட மாற்றம் செய்ததற்கு காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

அதில், தமிழக அரசு திருச்சி சரக காவல்துறை டிஐஜி பாலகிருஷ்ணனை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதற்கு காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் வன்மையாகக் கண்டனம் செய்கிறது. திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் அவர்களின் பணிமாற்றம் வழக்கமானது. அரசின் முடிவு 39 காவல்துறை உயரதிகாரிகள் மாற்றத்தில் அவரும் ஒருவர் என அரசு இதற்கு விளக்கம் தரலாம்.

மற்றவர்களின் பணிமாற்றம் அவ்வாறு இருந்திருக்கலாம். ஆனால் திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் பொறுப்பேற்று சுமார் ஒரு ஆண்டுகள்தான் ஆகிறது. ஓராண்டிற்குள் அவரை மாற்ற வேண்டிய தேவை எதனால் ஏற்பட்டது என தமிழக அரசு கூற வேண்டும்.

திருச்சி சரகத்தில் டிஐஜி பாலகிருஷ்ணன் பதவியேற்ற பிறகு தொடர்ந்து லாரிகளில் மாட்டுவண்டி டிராக்டர்களில் மணல் திருடுவது இடைவிடாது கண்காணித்து தடுத்து வந்தார். திருச்சி சரகத்தில் கரூர், திருச்சி, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் காவிரி மற்றும் கொள்ளிடம் அமராவதி ஆறு ஓடுகிறது. காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் மற்றும் பலரின் முயற்சியால் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, 2017 செப்டம்பர் முதல் இங்கு மணல் குவாரிகள் பெரும்பாலும் மூடப்பட்டுவிட்டது. மணல் குவாரிகள் மூடப்பட்டுவிட்டதால் திருட்டுத்தனமாக லாரிகளில் டிராக்டர்களில் மணல் எடுத்து வந்தால் வெளிப்படையாக தெரிந்துவிடும். மணல் குவாரிகள் மூடப்பட்டாலும் ஆளும் அஇஅதிமுக கட்சியினர் தொடர்ந்து இரவில் திருட்டுத்தனமாக மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்தனர்.

குறிப்பாக கரூர் மாவட்டத்தில் போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் பாதுகாப்பு ஆளும் அதிமுகவின் மணல் கொள்ளை அபாரமாக நடத்தி வந்தனர். காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கமும் மற்றும் பல சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து மணல் கொள்ளையை எதிர்த்து போராடும் திருட்டுத்தனமாக ஆனால் எடுத்துச் செல்லும்போது, காவல் துறை மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் உட்பட வருவாய்த் துறையினரிடம் தகவல் தெரிவித்து மணல் கொள்ளையை தடுத்து வந்தனர்.

காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தினர் மற்றும் பல சமூக செயல்பாடுகளும் மணல் கொள்ளையைப் பற்றி தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உட்பட வருவாய் துறை கனிமவளத் துறை யினர் காவல்துறையினர் ஆகியோருக்கு புகார் கொடுத்து வந்ததன் காரணமாக அனைவரின் அலைபேசி எண்களை கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் பிளாக் செய்து விட்டனர். இதனால் யாருக்கும் போன் செய்து புகார் சொல்ல முடியாது. இதுதான் கரூர் மாவட்டத்தில் உள்ள நிலைமை.

மணல் கொள்ளையர்களுக்கு கரூர் மாவட்ட ஆட்சித் தலைவரும் காவல் கண்காணிப்பாளர் உட்பட காவல்துறையினர் மறைமுகமாக துணை நின்று பாதுகாப்பு கொடுத்த பவளமே நடந்து வந்தது.

கடந்த 2019ஆம் ஆண்டு திருச்சி சரக டிஐஜி ஆக பாலகிருஷ்ணன் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு மணல் கொள்ளையை தடுப்பதில் கூடுதல் கவனம் செலுத்தினார் எந்த நேரமும் சமூக செயற்பாட்டாளர்கள் மணல் கொள்ளை நடப்பதை தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டார். சில காலம் டிஐஜி உத்தரவுக்கு கட்டுப்பட கரூர் மாவட்ட காவல்துறை பின்பு டிஐஜியிடம் இருந்து உத்தரவு வந்தால் உடனே மணல் கொள்ளையில் ஈடுபடும் ஆகிய அதிமுகவினருக்கு தகவல் கொடுத்து வீடு செல்லும்போது யாரும் மணல் கொள்ளையில் ஈடுபடாதவாறு பார்த்துக் கொண்டனர். சமூக சொத்தான ஆற்று மணலை ஆளும் கட்சியினர் அமைச்சரின் துணையோடு தொடர்ந்து கொள்ளையடிப்பதையும் போன் போட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் கரூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து மணல் கொள்ளையை மறைமுகமாக துணை நிற்பதும் டிஐஜி பாலகிருஷ்ணன் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்றோம்.

திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் அதன்பின் பல நேரம் மாவட்ட காவல் துறையினருக்கு மணல் கொள்ளை பற்றி தனக்கு வந்த தகவலை தெரிவிக்காமல் நேரடியாக சிறப்புக்குழு அமைத்து மணல் கொள்ளையர்களை கைது செய்து லாரிகளை வாகனங்களை பறிமுதல் செய்ய வைத்தார்.

மணல் கொள்ளைக்கு துணை நின்று மணல் கொள்ளையைப் பற்றி தகவல் கொடுக்கும் சமூக ஆர்வலர்களை மணல் கொள்ளையர்கள் மிரட்டல் காரணமாக கரூர் மாயனூர் காவல்துறை உதவி ஆய்வாளர் அவர்களை சஸ்பெண்ட் செய்தார். கடவூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தங்கவேல் அவர்கள் மீது மணல் கொள்ளையர்கள் ஆன அதிமுக ஒன்றிய செயலாளர் டிராக்டர் ஏற்றி கொலை செய்ய முயற்சி செய்தபோது கரூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் எந்த நடவடிக்கையும் எடுக்காதபோது டி.ஐஜி கவனத்திற்கு கொண்டு சென்று மணல் கொள்ளையர்களால் ஆகிய அதிமுக ஒன்றிய செயலாளர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வைத்தார்.

டிஐஜி பாலகிருஷ்ணன் தொடர்ந்து சமூக செயற்பாட்டாளர்களின் தகவலுக்கு மதிப்பு கொடுத்து மணல் கொள்ளையர்களை தடுக்க முயற்சித்தார். அறிவிக்கப்படாத அதிமுக மாவட்ட செயலாளர் போல் செயல்படும் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மணல் கொள்ளையர்களுக்கு துணையாக பல்வேறு வகையில் ஈடுபட்டு டிஐஜி செயல்பாட்டை தடுத்து வந்தார்.

கோயமுத்தூரில் சாராயக்கடையை எதிர்த்துப் போராடிய பெண்ணை அடித்து எஸ்பியாக பதவி உயர்வு பெற்ற பாண்டியராஜன் அவர்களும் குறிப்பாக பிப்ரவரி 2020 மணல் கொள்ளையில் ஈடுபட்ட பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் மணல் கொள்ளையர்கள் கரூர் தாந்தோன்றிமலை காவல்துறையினர் பிடித்து கைது செய்தனர். டிஐஜி வழக்குப் போட சொல்லியும் கூட கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் நேரடியாக தாந்தோன்றிமலை காவல்துறையினரிடம் பேசி அவர்களை விடுவித்தனர் .

அதேபோல் கரூர் வெண்ணைமலை காவல் நிலையத்தில் ஜனவரி 2020 பாலமா புறத்தில் 27 வாகனங்கள் மணல் கொள்ளையர்கள் பிடிக்கப்பட்டபோது, நேரடியாக அமைச்சர் விஜயபாஸ்கரின் தம்பி காவல்துறையினரிடம் தலையிட்டு அவர்களை விடுவிக்க செய்தார்.

போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் அனைத்துப் பகுதி அதிமுக பொறுப்பாளர்களையும் அழைத்து மணல் கொள்ளையில் ஈடுபடுங்கள் வருவதை நான் பார்த்துக்கொள்கிறேன் என ஊக்கப்படுத்தினார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கருவூரில் மருத்துவ கல்லூரி திறப்பு விழாவிற்கு வந்த அன்று கூட ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் மணல் திருடப்பட்டது தொடர்ந்து சமூக செயல்பாட்டாளர்கள் புகார மீது பாலகிருஷ்ணன் மணல் கொள்ளைக்கு முடிவு கட்ட பல நடவடிக்கைகளை மேற்கொண்டு அதை தடுத்து நிறுத்தினார்.

மணல் கொள்ளையை தடுப்பது மட்டுமின்றி குளித்தலை முதலைப்பட்டி குளம் ஆக்கிரமிப்பு பிரச்சனையில் இரண்டு சமூக செயற்பாட்டாளர்கள் கொல்லப்பட்டபோது, நேர்மையான விசாரணையில் ஈடுபடாத குளித்தலை காவல் ஆய்வாளரை பணி நீக்கம் செய்தார். மணல் கொள்ளை ஆளும் அதிமுக கட்சியின் நடத்திவரும் லாட்டரி கொள்ளை பார் மற்றும் மதுக்கடை முறைகேடுகள் சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் சமூக செயல்பாட்டாளர்கள் குரலுக்கு மதிப்பு கொடுத்து தனது ஆளுகைக்கு உட்பட்ட வகையில் ஒழுங்குபடுத்தியவர். பாலகிருஷ்ணன் அவர்கள் நாங்கள் கண்ட வகையில் மணல் கொள்ளையை மனப்பூர்வமாக தடுக்க வேண்டும் என்று செயல்பட்டவர் பிஐஜி பாலகிருஷ்ணன்.

ஊழலும் லஞ்சமும் முறைகேடுகளும் எந்த வகையிலாவது சேர்க்கலாம் என புரையோடிப்போயுள்ள இந்த சமுதாயத்தில் மணல் கொள்ளையை தனக்குள்ள அதிகாரத்தை வைத்து தடுக்க முன் நின்ற காவல்துறையில் ஒருவர் டிஐஜி பாலகிருஷ்ணன். டிஐஜி பாலகிருஷ்ணன் ரெண்டாயிரத்தி பதினேழு சனவரியில் சென்னை மைலாப்பூர் துணை ஆணையராக பணியாற்றி போது வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டமாக நடந்த சென்னை மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தை அரசாங்கம் தடியடி நடத்தி கலைக்க சொன்னபோது போராடுவோம் தமிழ் மக்களை அடித்து கலைக்க மாட்டேன் என்று உறுதியாக நின்றார். அதனால் தமிழக அரசு வேறு காவல்துறை ஐபிஎஸ் அதிகாரிகளைவைத்து வரலாற்றுச் சிறப்புமிக்க மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இருந்தவர்களை தடியால் அடித்து கலவரத்தை அரங்கேற்றி காவல்துறையே தீ வைத்து நடத்தும் அட்டூழியம் அனைத்தும் நாம் அறிந்ததே.

டிஐஜி பாலகிருஷ்ணன் மதுரை எஸ்பி ஆக பணியாற்றியபோது, 2012 மே மாதம் மாவட்டம் மதுரை ஆட்சியர் சகாயம் அவர்களின் நாலு கிராமத்தில் 16 ஆயிரம் கோடி கிரானைட் முறைகேடு நடந்தது என்று தெரிவித்த அறிக்கைப்படி 2012 ஆகஸ்டு 6ஆம் தேதி மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மிஸ்ராவை முறைகேடுகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டது. அப்போது மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மிஸ்ரா மதுரை எஸ்பி பாலகிருஷ்ணன் ஆகியோர் ஒருவருடம் கிரானைட் முறைகேடுகளை ஆய்வுசெய்து ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி மதிப்புள்ள கிரானைட் கற்கள் உள்ளதை கண்டு பிடித்து தெரிவித்தவர்.

ஆகையால் சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட டிஐஜி பாலகிருஷ்ணன் திருச்சி சரகத்தில் பணியில் இருப்பது காவிரி கொள்ளிடம் அமராவதியில் ஆளும் அதிமுக கட்சியினர் மணல் கொள்ளையில் ஈடுபட முடியாது என்பதற்காகவே அவரை தற்போது பணிமாற்றம் செய்துள்ளார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் ஜூன் 24 திருச்சி வந்தது அரசு மேற்கொள்ளும் பணிகளை ஆய்வு செய்ய அல்ல ஆளும் அதிமுகவினர் தடையில்லாமல் கொள்ளை அடிக்க வழி ஏற்பாடு செய்வதற்கு என்று டிஐஜி பாலகிருஷ்ணன் பணிமாற்றம் மூலம் தெரிய வருகிறது. டிஐஜி பாலகிருஷ்ணன் பரிமாற்றத்தை தமிழக அரசே உடனே ரத்து செய். இல்லையெனில் டிஐஜி பாலகிருஷ்ணன் மாற்றத்தை ரத்து செய்யக்கோரி அனைத்து அமைப்புகளையும் இணைத்து தீவிர போராட்டம் மேற்கொள்வோம் என தெரிவித்துக் கொள்கிறோம் என காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT