ADVERTISEMENT

"கார்ப்பரேட் - காவி பாசிசம் எதிர்த்து நில்!" - பிரமாண்டமாக துவங்கிய மாநாடு 

08:46 PM Feb 23, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

இந்தியாவில் அதிகரித்து வரும் ஆர். எஸ். எஸ் இந்து மதவெறி பயங்கரவாதம் குறிப்பாக சிறுபான்மையினர், தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறை, இதற்குப் பின்புலமாக இருக்கும் கார்ப்பரேட்டுகளின் நலன் இவற்றை மையமாகக் கொண்டு "கார்ப்பரேட் - காவி பாசிசம் எதிர்த்து நில்!" என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் சார்பில் இன்று மாலை திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் சிறப்பு மாநாடு ஆரம்பமானது.

ADVERTISEMENT

தமிழகம் முழுவதிலும் இருந்து மக்கள் அதிகார குழுவினர் குழுக்களாக கலந்து கொண்டாடினர். இம்மாநாட்டில் உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராய், குஜராத் கலவரத்தில் மோடி, அமித் ஷாவின் பங்கை அம்பலப்படுத்திய சமூக செயற்பாட்டாளர் வழக்குரைஞர் தீஸ்தா சேதல்வாத், கௌரி லங்கேஷ், கல்புர்கி கொலை வழக்கில் கர்நாடக அரசின் சிறப்பு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டுள்ள தோழர் பாலன் ஆகியோர் சிறப்புறையாற்றினார்.

மேலும் ம.க.இ.க மாநிலச் செயலர் தோழர் மருதய்யன், தோழர் தியாகு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆளூர் ஷா நவாஸ் ஆகியோரும் உரையாற்றினர். ம.க.இ.க வின் கலை நடைபெற்றது.

இம்மாநாட்டை நடத்த திருச்சி காவல்துறை தொடர்ந்து அனுமதி மறுத்து தடுத்து வந்த நிலையில் மூன்றாவது முறையாக உயர் நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று மிகச்சிறப்பாக துவங்கியது. இந்த மாநாட்டிற்காக. தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்த மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்தவர்களை சட்டவிரோதமான முறையில் கைது செய்தனர்.

அரசியல் சட்டம் வழங்கியுள்ள கருத்து சுதந்திரத்தையும், நீதிமன்ற ஆணைகளையும் மதிக்காது தமிழக காவல்துறை ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க வின் கைக்கூலியாகவே செயல்படுகிறது. இந்த தடைகளை முறியடித்து நடைபெறும் இந்த மாநாட்டில் அனைத்து ஜனநாயக உணர்வாளர்களும், சிந்தனையாளர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடதக்கது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT