ADVERTISEMENT

சமையலர் பதவிக்கு 5 லட்சம் லஞ்சம்? - பரபரப்பு குற்றச்சாட்டு!

04:32 PM Jan 08, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

மாதிரி படம்

ADVERTISEMENT

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகள் தங்கி கல்வி கற்க, தமிழ்நாடு அரசு விடுதிகளைக் கட்டியுள்ளது. அதன் மூலம் அவா்களுக்கு இலவசமாக அனைத்து வசதிகளும் செய்துதருகின்றது.

பெரும் நகரங்களில், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக 7 விடுதிகளும், கல்லூரி மாணவிகளுக்காக 2 விடுதிகளும், எம்.பி.சி. விடுதிகள் இருபாலருக்கும் சேர்த்து 3 விடுதிகளும், சிறுபான்மையினருக்கு 1 விடுதியும் உள்ளது. இப்படி மாவட்டம் தோறும் சுமார் 10 விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பயன்பெறுகின்றனர்.


தற்போது விடுதிகளில் தங்கி மாணவ, மாணவிகளுக்கு சமைத்துத் தரும் சமையலர் பணிக்கான விளம்பரம் அரசுத் தரப்பில் வெளியிடப்பட்டிருந்த நிலையில், அதற்கான நேர்முகத்தேர்வும் நடத்த ஆயத்தமாயினார்கள். ஆனால், மேலிட உத்தரவு வராததால் செயல்படுத்தாமல் வைத்துள்ளனர்.

இந்தச் சமையலர் பணியாளருக்கு ரூ.5 லட்சம் விலை நிர்ணயித்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், நியாயவிலைக்கடை பணியாளருக்கு 4 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் குற்றச்சாட்டுகளும் புகார்களும் விண்ணப்பித்தவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT