
கடலூரில் 14,000 ரூபாய் லஞ்சம் பெற்ற விஏஓவை கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ரூபநாராயணநல்லூர் கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலராக இருப்பவர் சுப்பிரமணியன். இவர் பட்டா மாறுதலுக்கு ராமதாஸ் என்பவரிடம் 14 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், ராமதாஸிடம் இருந்து லஞ்சப் பணத்தை பெற்றபோது கையும் களவுமாக விஏஓ சுப்பிரமணியனை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)