ADVERTISEMENT

“சாலை பழுதுபார்க்கும் பணிகள் ஒரு வாரத்தில் முடிக்கப்படும்” -  மெட்ரோ இரயில் நிர்வாகம் 

11:02 PM Oct 03, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை போரூர், வடபழனி மற்றும் கோடம்பாக்கம் பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையான ஆற்காடு சாலை பழுதுபார்க்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அனைத்தும் ஒரு வார காலத்தில் முடிக்கப்படவுள்ளதாகவும் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம்
தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “கோடம்பாக்கம் முதல் போரூர் வரையிலான ஆற்காடு சாலையில் வடபழனி, சாலிகிராமம், சாலிகிராமம் கிடங்கு, வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர், காரம்பாக்கம் மற்றும் ஆலப்பாக்கம் ஆகிய பகுதிகளில் சென்னை மெட்ரோ இரயில் ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் சாலை பழுதுபார்க்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

வளசரவாக்கம் பகுதியில் உள்ள ஆற்காடு சாலையில் சாக்கடை நீர் பெருக்கெடுத்து ஓடுவதாலும், அவ்வப்போது பெய்து வரும் மழையாலும், மற்றும் பிற துறைகளின் பணிகள் சாலை ஓரம் நடைபெறுவதாலும் சாலை சேதமடைந்துள்ளது. சாக்கடை நீரை சென்னை பெருநகர குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் வாரியம் மற்றும் மெட்ரோ இரயில் நிறுவனத்தின் ஒப்பந்த நிறுவனம் இணைந்து ஆழ்துளையில் நிரம்பி வரும் தண்ணீரை சுத்தம் செய்து வருகின்றனர். மேலும், கோடம்பாக்கம் முதல் போரூர் வரையிலான ஆற்காடு சாலையில், சாலை சீரமைமப்புப் பணிகளையும்; மெட்ரோ இரயில் தூண் பணிகள் முடிவடைந்த இடங்களில் தடுப்புகளை மாற்றி அமைக்கும் பணிகளையும் ஒப்பந்ததாரர் தொடங்கியுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT