Skip to main content

சுடு... சுடு... தூத்துக்குடியில 13 பேரு... இங்க 100 பேர் சாகத் தயார்: கதறும் விவசாயி

Published on 08/06/2018 | Edited on 08/06/2018
Farmer



சேலம் - சென்னை எட்டு வழிச் சாலைக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சேலம் மாவட்டம், குப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நாராயணன் கடும் எதிர்ப்பை தெரிவித்தார். இவர் எம்.காம். பட்டதாரியும் கூட.
 

நக்கீரன் இணையதளத்திடம் அவர் பேசும்போது, 

 

மோடி திட்டம் என்று சொல்லி 8 வழிச் சாலையை போடுகிறீர்களே, நாங்கள் எங்கயையா போவோம். தட்ட எடுக்கட்டுமாய்யா. 8 வழிச் சாலை, பசுமை சாலை என்று சொல்லி இந்த பசுமையை அழித்துவிட்டா போடுவீங்க பசுமை ரோடு. நாங்க அண்ணன், தம்பி 3 பேரு. இனி எதை வச்சி பிழைப்ப நடத்துவோம். 4 ஏக்கர்தான் இருக்கிறது. அந்த 4 ஏக்கரையும் நீங்க எடுத்துகிட்டா, நாங்க எதை வாழ்வாதாரமா நம்பி இருக்கிறது. எங்க பொண்டாட்டி, புள்ளைங்கள எப்படிய்யா காப்பாத்துவோம்.
 


இதையெல்லாம் அரசாங்கத்துக்கிட்ட கேட்க முடியலய்யா. ஆட்டக் கடிச்சி, மாட்டக் கடிச்சி, கடைசியா மனிசனை கடிக்கிற கதையா.. இந்த எடப்பாடி பழனிசாமி சொந்த ஊருக்கு ஆப்பு வைச்சிட்டு போறாரு... 
 

தமிழ்நாடு வறட்சியா போயிடும்போலிருக்கு, சுடுகாடா போயிருமே... நான் ஒரு எம்.காம். பட்டதாரி, விவசாயத்தை நம்பி வந்தேன். எத்தனையோ யூடியூப்பில் பார்த்திருக்கிறோம். ரசாயனத்தை கலந்து பயிர் பன்றாங்க. நாங்க இயற்கை விவசாயம் பண்ணலாமுன்னு பட்டதாரியா வந்தேன். இந்த விவசாயத்துக்கே ஆப்பு வைக்கிறீங்களே...

 

ஆடு, மாடு, கோழி வளர்க்க சொல்றீங்க.  மானியம் தரேன், அது தரேன், இது தரேன்னு சொல்றீங்களே... இப்ப விவசாய நிலத்தை அடியோட புடுங்கிகிட்டு போறீங்களே... நாங்க எப்படிங்க வாழுறது. எங்க உயிரே போனாலும் பரவாயில்லீங்க... இந்த எட்டு வழிச்சாலை திட்டமே வேணாம். எங்க உயிர் போனாலும் விவசாய நிலத்தை பாதுகாக்கவே தீருவோம். என்னை சுட்டுப் பொசுக்கினாலும் பரவாயில்ல. நாங்க அண்ணன், தம்பிங்க, அப்பா, அம்மா, பிள்ளைங்க, பொண்டாட்டிய கூட்டிக்கிட்டு எங்க போவோம்... பிச்சையெடுக்க போவட்டுமா... சொல்லுங்க... 

 

எட்டு வழிச்சாலை வந்தால் வெளிநாட்டு முதலீடுகள் அதிகமாக வரும் என்று முதல் அமைச்சர் சொல்லியிருக்கிறார் இந்த விவசாய நிலத்தை எடுப்பதாக சொல்லும் மோடி, இதனால் யாருக்கு லாபம் என்று சொல்லுவாரா. விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் லாபமா?

 

இழப்பீடு தருவதாக சொல்கிறார்களே? இழப்பீடு யாருக்கு வேணும்?. இந்த இழப்பீடு வச்சி எத்தனை நாளைக்கு பிழைக்க முடியும்?. ரூபாய் 30 லட்சம், ரூபாய் 40 லட்சம் மார்க்கெட்டில் போகும் நிலையில், அரசு வெறும் ரூபாய் ஒரு லட்சமும், இரண்டு லட்சமும் கொடுப்பதால் என்ன பயன் சொல்லுங்க. உளுந்தூர்பேட்டை ரோட்டில் நிலத்தை எடுத்துள்ளார்களே. எத்தனை பேருக்கு இழப்பீடு கொடுத்திருக்கிறார்கள். இன்னமும் அந்த வழக்கு நடந்துகிட்டு இருக்கு. ஒரு ஏக்கருக்கு ரூபாய் 25 ஆயிரம், 27 ஆயிரமுன்னு கொடுத்திருக்கிறார்கள். அதை வாங்கி இன்னைக்கு ஒரு மாடு வாங்க முடியுமா? 

 

எங்களுக்கு விவசாயத்தை விட்டா எதுவும் தெரியாது. தமிழ்நாட்டு மக்களை, இளைஞர்களை கேட்கிறேன். விவசாயம் பண்றது தப்புன்னா, விவசாயிகளை முதலில் சுட்டுத் தள்ளுங்கள். தொழில்தான் வளர வேண்டும், விவசாயம் வளர வேண்டாமா. தொழில் வளர்ந்தால் எல்லோரும் சோறை திங்காமல் பணத்தைத்தான் திண்பார்களா. பணத்தை திண்ணால் வயிறு நிறையும் என்றால் விவசாயிகளை சுட்டுக்கொன்றுவிடுங்கள். 

 

இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் என்கிறார்கள். ஆனால் தமிழ்நாடு விரைவில் பாலைவனமாக போகிறது. எட்டு வழிச்சாலை வந்தால் குடும்பத்துடன் விஷம் குடித்து சாக வேண்டியதுதான். நான் மட்டும் பாதிக்கப்படவில்லை. எல்லா விவசாயிகளும் பாதிக்கப்படுகிறார்கள். மக்களுக்கு எதிரான திட்டத்தை ஏன் செயல்படுத்த வேண்டும். சாலை போடுவதில் உடன்பாடு இல்லை. 

 

அப்படி போட வேண்டும் என்றால் தூத்துக்குடி ஸ்டெர்லைட்டில் 13 பேரை சுட்ட மாதிரி சுடு... சுடு... 100 பேர் சாகத் தயாராக இருக்கிறோம். எங்களுக்கு பின்னால் இருக்கிற சந்ததி பிழைத்தால் போதும். விவசாயிகளை நாசமாக்கும் இந்த சாலை வேண்டாம். இவ்வாறு கூறினார். 



 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Traffic change in Chennai for a year

சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராயர் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

Traffic change in Chennai for a year

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 

Traffic change in Chennai for a year

சிஐடி நகர் 1ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.