ADVERTISEMENT

2021ல் சாலை விபத்துகள்: தேசிய குற்ற ஆவணக் காப்பகம் பட்டியல் வெளியீடு - தமிழகத்தின் இடம்?

07:54 AM Aug 30, 2022 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த 2021ம் ஆண்டில் மட்டும் நடந்த சாலை விபத்துகளில் 16,685 பேர் இறந்துள்ளதாக சமீபத்தில் வெளியான அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் சமீபத்தில் 2021ம் ஆண்டில் நடந்த கொலைகள், தற்கொலைகள், சாலை விபத்துகள், பாலியல் வன்கொடுமைகள் போன்ற பல்வேறு அடிப்படைகளில் மாநிலங்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் அதிகம் நடைபெறும் சாலை விபத்து மரணங்களில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

நாடு முழுதும் சாலை விபத்துகளில் ஏற்பட்ட மரணங்கள் பற்றிய தரவுகளை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது. இதில் சாலை விபத்துகளில் ஏற்பட்ட உயிரிழப்புகளில் தமிழகம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. அதன் படி, 2021ம் ஆண்டில் சாலை, ரயில் மற்றும் சாலையை கடந்து செல்லும் போது ஏற்பட்ட விபத்துகளில் இந்தியாவில் 1.73 பேர் இறந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக உத்திரப் பிரதேசம் முதலிடத்திலும் இரண்டாம் இடத்தில் தமிழ்நாடும் உள்ளது. உத்திரபிரதேசத்தில் 24,711 மரணங்களும் தமிழகத்தில் 16,685 பேரும் போக்குவரத்து விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். மூன்றாம் இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. இங்கு 16446 பேர் விபத்துகளில் மரணம் அடைந்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT