ADVERTISEMENT

போடிமெட்டில் சாலை விபத்து : சுற்றுலா பயணிகள் படுகாயம்

04:46 PM Apr 28, 2018 | rajavel

ADVERTISEMENT


தேனி மாவட்டத்தில் உள்ள துணை முதல்வர் ஒபிஎஸ் தொகுதியான போடி மெட்டுச் சாலையில் விபத்து ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. இன்று அதிகாலை, போடி மெட்டில் 7வது கொண்டை ஊசிவலைவில் ஏற்பட்ட சாலைவிபத்தில் 21 பேர் படுகாயமடைந்தனர்.

ADVERTISEMENT

திருவாருர் மாவட்டம் திருத்துறை பூண்டிச்சார்ந்த சுற்றுலா பயணிகள் 21 பேர் மூணார் சென்று விட்டு போடிமெட்டு வழியாக இன்று அதிகாலை வந்து கொண்டிருந்த போது ப்ரேக் செயலிழந்து பாறை மீது மோதியது. இதில் வேனில் பயணம் செய்த 21பேர் காயமடைந்தனர். 15 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து விரைந்த காவல்துறை, அவர்களை மீட்டு போடி அரசுமருத்துவமனையில் அனுமதித்தனர். சிலர் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

போடி மெட்டுச் சாலையில் இரவு நேரங்களிலும், அதிகாலையிலும் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். மழை பெய்தால் அடிக்கடி பாறைகள் உருண்டு விழும் சம்பவமும் போடி மெட்டுச் சாலையில் நடைபெறும். பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் மூணாறு உட்பட கேரளாவிற்கு சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மேலும் கேரளாவிற்குச் செல்ல தென் தமிழக மக்கள் அதிகமாக போடி மெட்டுச் சாலையை தான் பயன்படுத்துகிறார்கள். இந்த நிலையில், வாகன ஓட்டிகளுக்கு போதிய விழிப்புணர்வை மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறையும், போக்குவரத்துத்துறையும் ஏற்படுத்தி இப்படி பட்ட விபத்து களை தவிர்க்க முன் வர வேண்டும்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT