தனியார் கல்லூரி பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 24 மாணவர்கள் காயம் அடைந்தனர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தொழுதூரில் உள்ள தனியார் கல்லூரி பேருந்து, இன்று (16ம் தேதி) காலை கருவேப்பிலங்குறிச்சியில் இருந்து மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு வந்தது.

bus

Advertisment

மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு வந்த அந்த பேருந்து கல்லூரி அருகே வரும்போது, முன்னால் சென்ற மினி பஸ்சை முந்திச் செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக கல்லூரி பேருந்து சாலையோர சேற்றில் சிக்கி கவிழ்ந்தது. இதில் கல்லூரி பேருந்தில் பயணம் செய்த 24 பேர் காயமடைந்தனர்.

Advertisment

தொழுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறிய காயமுற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் பலத்த காயமடைந்த நான்கு மாணவிகள் உள்ளிட்ட ஐந்து பேர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து போலிசார் விசாரித்து வருகின்றனர்.