ADVERTISEMENT

உணவகங்கள் தங்களின் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு டெலிவரி செய்யலாம்!

08:37 PM Jan 08, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாடு அரசு இன்று (08/01/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டில் நாளை (09/01/2022) அறிவிக்கப்பட்டுள்ள, ஊரடங்கின் போது, உணவகங்கள் மற்றும் சிற்றுண்டி விடுதிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு தனியார் மின்னணு வர்த்தக விநியோக முறையில் மட்டுமின்றி, தங்களுடைய சொந்த விநியோக முறையில் (Own Delivery) மூலமாகவும் உணவுப் பொருட்களை விநியோகம் செய்ய அனுமதி அளிக்கப்படும்.

இவ்வாறு வாடிக்கையாளர்கள் வீடுகளுக்கு உணவகம் மூலமாக நேரடியாக உணவு வழங்கப்படுவதற்கு காவல்துறை ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா, ஒமிக்ரான் பரவல் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் நாளை (09/01/2022) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அரசு விளக்கம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT