ADVERTISEMENT

நான்காவது நாளாக 62 மணி நேரத்தை தாண்டியது மீட்புப்பணி

08:12 AM Oct 28, 2019 | kalaimohan

திருச்சி மணப்பாறை அடுத்த நடுக்காட்டுபட்டியில் ஆள்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழு முயற்சி எடுத்து வருகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் பேராலயங்கள் பள்ளிவாசல்கள், கோயில்களில் சுஜித் மீண்டு வர வேண்டும் என சிறப்பு தொழுகைகள், பிரார்த்தனைகள், பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது நடுக்காட்டுபட்டியில் நடிகர் தாமு பிரார்த்தனை மேற்கொண்டு வருகிறார். அதேபோல் இந்த விபத்து குறித்து டுவிட்டரில் தெரிவித்துள்ள கவிஞர் வைரமுத்து,

அரசு எந்திரத்தையோ
ஆழ்துளை எந்திரத்தையோ
குறை சொல்லும் நேரமில்லை;
குழந்தை மீட்பே குறிக்கோள்.
பாறை என்பது நல்வாய்ப்பு; மண்சரியாது.
தடைக்கல்லைப் படிக்கல்லாக்கி முன்னேறுவோம் என தெரிவித்துள்ளார்.


அதேபோல் ஆழ்துளை கிணறு அருகே இதுவரை 40 அடி குழி தோண்டப்பட்டுள்ளது. பாறை இருப்பதால் பணியில் சற்று தாமதம் ஏற்படுகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது நான்காவது நாளாக 62 மணி நேரத்தை தாண்டியது, அதேபோல் குழிதோண்டும் பணி 24 மணிநேரத்தை கடந்து மீட்புப்பணி நடைபெற்று வருகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT