ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்26 அடியில்உட்கார்ந்த நிலையில் இருக்க, முதலில் மூச்சுத்திணறல் ஏற்படாமல்சுவாசக்க போதுமான ஆக்ஸிஜன் கொடுக்கபட்டுவருகிறது. தற்பொழுது சுஜித் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் கிணற்றுக்குள் உள்ள குழந்தைக்கு ஒருபுறம் மன தைரியத்தை கொடுக்க அவரது உறவினர்களும் தாய், தந்தை ஆகியோரும் மருத்துவக் குழுவினரின் பரிந்துரையின் பேரில் முயற்சி எடுத்து வருகின்றனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இந்நிலையில் குழந்தையின் ஒரு கைக்கு சுருக்குக் கயிறு மாட்டப்பட்ட நிலையில் மற்றொரு கையிக்குசுருக்குமாட்ட பலமுறை முயற்சி செய்தும் பலன் அளிக்காததால் மீண்டும் ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு பக்கவாட்டில் மீண்டும் பள்ளம் தோண்டும் பணிகள் நடைபெற்றது. ஆனால் 15 அடிக்குமேல் பாறை இருந்தததால்தற்போது அந்த பணியும் நிறுத்தப்பட்டுள்ளது.
ஒரு கையில் மாட்டப்பட்டிருந்த சுருக்கு கயிறும் மணலின் ஈரப்பதம் வழுவழுப்புத்தன்மை காரணமாகவிலகியதால் அந்த முயற்சியும் கைவிடப்பட்டது. அதனை அடுத்து தற்போது ஐஐடியை சேர்ந்த தொழில்நுட்ப குழுவினர் ஒரு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குழந்தையை மீட்கமுடியும் என அந்த இடத்திற்கு விரைந்து வந்து உள்ளனர்.
தற்பொழுது பள்ளம் தோண்டும் முயற்சிக்கும், மணிகண்டன் கொண்டுவந்த சிறப்பு கருவியின் மூலம் மீட்கப்படுவதற்கானமுயற்சியும் தோல்வி அடைந்த நிலையில் ஐஐடி வல்லுனர்கள் குழு குழந்தையை மீட்க போராடி வருகின்றனர்.