திருச்சி மனப்பாறையை அடுத்த நடுகாட்டுப்பட்டியில் இரண்டு வயது குழந்தையான சுஜித் வீட்டின் அருகே 30 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில்தவறி விழுந்துள்ள நிலையில், மீட்புப்பணியில்ஒரு கையில் மாட்டப்பட்டிருந்த சுருக்கு கயிறும் மணலின் ஈரப்பதம் வழுவழுப்புத்தன்மை காரணமாகவிலகியதால் அந்த முயற்சியும் கைவிடப்பட்டது. அதனை அடுத்து தற்போது ஐஐடியை சேர்ந்த தொழில்நுட்ப குழுவினர் ஒரு தொழில்நுட்பத்தை பயன்படுத்திமீட்க வந்துள்ளனர்.

Advertisment

 Will definitely recover .... The IIT technical team at the peak of the 10 hour struggle!

தற்பொழுது பள்ளம் தோண்டும் முயற்சிக்கும், மணிகண்டன் கொண்டுவந்த சிறப்பு கருவியின் மூலம் மீட்கப்படுவதற்கானமுயற்சியும் தோல்வி அடைந்த நிலையில் ஐஐடி வல்லுனர்கள் குழு குழந்தையை மீட்க போராடி வருகின்றனர்.

ஐஐடி வல்லுனர்கள் கொண்டுவந்துள்ள அந்த தொழில்நுட்பக் கருவியானது 15 கிலோ எடை கொண்ட ஒரு உருளை வடிவ தொழில் நுட்ப கருவி ஆகும். அதன் மூலமாக உள்ளே ஆக்சிஜன் கொண்டு செல்வதோடு கேமரா, மைக் போன்றவைகளும் கொண்டு செல்லப்பட்டு குழந்தையின் நிலை குறித்து ஆராய முடியும்.

Advertisment

 Will definitely recover .... The IIT technical team at the peak of the 10 hour struggle!

2013 ஆம் ஆண்டு ஐஐடியில் இந்த தொழில்நுட்பம் தொடர்பான அந்தக் கருவி பதிவு செய்யப்பட்டு அதன் மூலம் குழந்தைகளை மீட்கலாம், பாதுகாப்பான கருவிதான் என உத்திரவாதமும் வழங்கப்பட்டுள்ளது என அந்த குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது முழு நம்பிக்கையுடன் அந்த உபகரணம் ஆனது உள்ளே அனுப்பப்பட்டு வருகிறது.