ADVERTISEMENT

பத்திரப்பதிவு செய்ய மறுப்பு; இரவு நேரத்திலும் தர்ணாவில் ஈடுபட்ட குடும்பத்தினர் 

03:51 PM Feb 13, 2024 | ArunPrakash

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த லாலா ஏரி பகுதியை சேர்ந்தவர் விவசாயி கண்ணன். இவருக்கு சொந்தமான 1.75 ஏக்கர் விவசாய நிலம் இந்திரா நகர் பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை தன்னுடைய மகன் ஞானவேல் மற்றும் இறந்த மகன் மாது என்பவரின் மகள்களான தீபிகா, கோபிகா, இந்துமதி, தனிஷ்கா ஆகியோருக்குகான செட்டில்மென்ட் கொடுக்க பிப்ரவரி மதியம் 12 மணி அளவில் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வருகை தந்து பத்திரப்பதிவு செய்ய அனைத்து ஆவணங்களை பதிவு அதிகாரியிடம் வழங்கியுள்ளார். பத்திரப்பதிவு செய்ய டோக்கனும் வழங்கப்பட்டு இருந்தது.

ADVERTISEMENT

இரவு 9 மணி கடந்தும் பதிவு அதிகாரி பத்திரப்பதிவு செய்ய மறுத்தும் மீண்டும் நாளை வர சொல்லியதால் ஆத்திரமடைந்த கண்ணன் மற்றும் அவரது உறவினர்கள் சார் பதிவாளர் அலுவலகத்திற்குள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு நேரத்தில் சார் பதிவாளர் அலுவலகத்திற்குள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு நகர போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் சார் பதிவாளர் ஆவணங்களை சரி பார்த்து பத்திரப்பதிவு செய்ய சம்மதம் தெரிவித்ததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

லஞ்சம் தந்தால் உடனடியாக பத்திரப்பதிவு செய்வதும் லஞ்சம் குறைவாக தருபவர்களின் பத்திரத்தை தாமதப்படுத்துவதும் மறுநாள் பத்திரப்பதிவு செய்வதாகவும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் தொடர்ச்சியாக மக்களை அலைய விடுகின்றனர். பேரத்தை அதிகப்படுத்தி லஞ்சம் வாங்குவதற்கான வழியாக இதை செய்கின்றனர் எனக் குற்றம் சாட்டப்படுகிறது. பசியோடு சுமார் பத்து மணி நேரம் காத்திருந்து குடும்பத்தார் பதிவு செய்ய மீண்டும் நாளை வரச் சொன்னதால் அதிருப்தி அடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடத்திய பின்பு சமாதானம் செய்து பின்னர் பத்திரப்பதிவு செய்துள்ளனர்

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT