திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகரில் உள்ள நாகேஸ்வரன் கோயில் அருகே அரசு நிதியுதவி பெறும் பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்குள் இருந்து ஏப்ரல் 18ந் தேதி இரவு பேச்சு சத்தமும், சிரிக்கும் சத்தமும் வெளியே கேட்டுள்ளது. அக்கம் பக்க குடியிருப்புவாசிகளுக்கு சந்தேகம் வந்துள்ளது. பள்ளியை கடந்த 30 நாட்களாக திறக்கவில்லை. அப்படியிருக்க பள்ளிக்குள் யார் இருக்கிறது என சந்தேகம் வந்து பள்ளி முன் வந்துள்ளனர்.

incident in thirupathur

Advertisment

பள்ளி கேட் சாத்தப்பட்டிருந்தது. ஆனால் பள்ளிக்குள் உள்ள ஒரு அறையின் கதவை இரும்பு கம்பியால் பூட்டை உடைத்துயிருப்பது தெரியவந்தது. உள்ளேயிருந்து வெளிச்சம் வந்துள்ளது. அதனைத்தொடர்ந்து பள்ளிக்குள் புகுந்த அந்த பகுதி இளைஞர்களும், ஆண்களும் அறைக்குள் இருந்தவர்களை மடக்கியபோது, உள்ளே அவர்கள் கஞ்சா அடித்துக்கொண்டு இருந்தது தெரியவந்தது.

nakkheeran app

Advertisment

இதில் கோபமான அப்பகுதியினர், அவர்களை நாலு அடிப்போட்டு எங்கும் ஓடிவிடாதபடி அறைக்குள் வைத்துக்கொண்டு இருந்துள்ளனர். இதுபற்றி உடனடியாக ஆம்பூர் போலீஸாருக்கு தகவல் சொல்ல அவர்கள் வந்து விசாரித்துள்ளனர். அதோடு அவர்களிடம் இருந்த கஞ்சா பொட்டலங்கள், பூட்டு உடைக்க பயன்படுத்திய இரும்பு கம்பி போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

incident in thirupathur

அவர்களை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்திவருகின்றனர். அந்த 5 பேரும் 18 வயதுக்கு கீழானவர்களாக இருக்க வாய்ப்புள்ளது என்கின்றனர் அப்பகுதி மக்கள். அவர்களுக்குகஞ்சா எங்கிருந்து கிடைத்தது, யார் விற்பனை செய்வது என விசாரணை நடத்திவருகின்றனர்.