Where are the detainees? - AIADMK struggle

Advertisment

மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியிடம் அதிக நேரம் தொலைபேசியில் பேசிய விவகாரத்தில் சிவகாசி தனிப் படையினரால் கடந்த 28/12/2021 அன்று காலை 7 மணி அளவில் திருப்பத்தூர் மாவட்ட அதிமுக தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் விக்கி என்கின்ற விக்னேஸ்வரன் மற்றும் ஜோலையார்பேட்டை அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஏழுமலை ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டு மூன்று நாட்கள் ஆகிய நிலையில் இருவர் குறித்து எங்கு இருக்கிறார்கள் என்று சரியான தகவல் கிடைக்கவில்லை. இதைப்பற்றி போலீசாரிடம் புகார் அளித்தும் சரியான பதில் கிடைக்கவில்லை. இதனால் இரு குடும்பத்தினரும் ஆழ்ந்த சோகத்தில் வாடி உள்ளனர். ஆதலால் இருவரையும் குறித்து சரியான தகவல் அளிக்குமாறும் மற்றும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகில் டிசம்பர் 31 ஆம் தேதி முன்னாள் அமைச்சர் வீரமணி தலைமையில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.