ADVERTISEMENT

முழு கொள்ளளவை நெருங்கும் செம்பரம்பாக்கம்

07:54 AM Dec 06, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக மாறியது. இந்த புயல் காரணமாகத் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்தது. அதனைத் தொடர்ந்து தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டியுள்ள பாபட்லாவிற்கு அருகே தீவிரப் புயலாக நேற்று (05.12.2023) மாலை 4 மணியளவில் மிக்ஜாம் புயல் கரையைக் கடந்தது.

தமிழகத்தில் காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. 6,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 4,000 கன அடியாக நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி தற்போது 23.45 அடியாகவும், கொள்ளளவு 3,473 மில்லி கன அடியாகவும் உள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT