ADVERTISEMENT

மீன் வலையில் சிக்கிய அரிய வகை நாகப் பாம்பு!

03:28 PM Oct 17, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி ஆற்றில் 2 லட்சத்து 3,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், கதவனை பகுதி அருகே ஆற்றின் கரையோரத்தில் உள்ள சுடுகாட்டுப் பகுதியில் மீனவர்கள் பயன்படுத்திய பயன்படாத வலைகளை வைத்துள்ளனர். இதில், 10 அடி அரிய வகை நாகப்பாம்பு அந்த வலையில் சிக்கியிருந்திருக்கிறது. இன்று காலை மீனவர்கள் மீன் வலைகள், ரப்பர் படகுகளை ஆற்றிலிருந்து வெளியேற்றி பாதுகாப்பாக வைக்கச் செல்லும்போது அந்த பாம்பை பார்த்து அச்சமடைந்துள்ளனர்.

இதை அறிந்த பொதுமக்கள், மீனவர்கள் அப்பகுதியில் அதிகளவில் குவிந்தனர். புதுவகை நல்ல பாம்பு என்பதால் பொதுமக்கள் மீனவர்கள் அச்சமடைந்து, தீயணைப்புத் துறையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் 30 நிமிட போராட்டத்திற்குப் பிறகு பாம்பை உயிருடன் மீட்டு வனப்பகுதியில் விட்டனர். இந்த பாம்பு நீரில் அடித்து வந்திருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT