ADVERTISEMENT

திமுக எம்.எல்.ஏ முயற்சியால் ஏழை மாணவர்களுக்கு தரப்பட்ட மடிக்கணினி!

07:34 AM Dec 13, 2019 | santhoshb@nakk…

தமிழக அரசால் 11- ஆம் வகுப்பு மற்றும் 12- ஆம் வகுப்பு பயிலும் அரசுப்பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கி வருகிறது. இந்த மடிக்கணினிகள் தனியார் பள்ளி மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்குவதில்லை.

ADVERTISEMENT


அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளிலும் ஏழை மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள் என சில கல்வியாளர்கள் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றும் இதுவரை அதன்மீது கவனம் செலுத்தவில்லை தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு.

ADVERTISEMENT


இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டையில் இயங்கும் அரசு நிதியுதவி பெறும் எல்.எப்.சி என்கிற கிருஸ்த்துவ மேல்நிலை பள்ளி நிர்வாகம், ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும், ராணிப்பேட்டை திமுக மாவட்ட செயலாளருமான காந்தியிடம், மடிக்கணினி அவசியம் குறித்து அவரிடம் கோரிக்கை வைத்தனர்.


இதன் அடிப்படையில் எம்.எல்.ஏ காந்தி தனது சொந்தி நிதியோடு, ராணிப்பேட்டையில் இயங்கும் தனியார் தொழிற்சாலைகளின் உரிமையாளர்களிடம், நிதியுதவி வாங்கி, 20 லட்ச ரூபாய் செலவில் 100 மடிக்கணினிகளை வாங்கி, அந்த பள்ளி மாணவ- மாணவிகளுக்கு டிசம்பர் 12ந்தேதி காலை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை காந்தியோடு தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் சிலரும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.



Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT