ADVERTISEMENT

ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

09:31 PM Sep 03, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே மாலை மற்றும் இரவு வேளைகளில் சென்னை மற்றும் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பொழிந்து வருகிறது. தற்போது மேலும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தென் தமிழக கடற்கரை பகுதியில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை மீன மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என ராமேஸ்வரம் மீன் வள இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். அதே சமயம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் குற்றாலத்தின் பிரதான அருவி, ஐந்தருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT