தடை செய்யப்பட்ட சுருமடிவலை விவகாரத்தால் இரண்டு கிராம மீனவர்கள் நடுக்கடலில், கற்கள் பாட்டில்களை வீசி தாக்கிக்கொண்டதும், படகுகளைக்கொண்டு மோதிக்கொண்ட விவகாரம் கடலோர மாவட்டங்களில் பெரும் பதற்றத்தை உண்டாக்கியிருக்கிறது. 11 கிராம மீனவர்கள் வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

 The horrific conflict between fishermen in the Sea

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்பகுதியில் பல மீனவ கிராமத்தினர் மீன்பிடி தொழிலை செய்துவருகின்றனர். அதில் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி நாகப்பட்டினம் கீச்சாங்குப்பத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மீன்பிடித்துள்ளனர், இதனை அறிந்த வெள்ளப்பள்ளம் கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் மென்று பைபர் படகில் சென்று, அரசு தடை செய்யப்பட்ட சுருமடிவலைகளை பயன்படுத்தி நீங்க மீன்பிடிப்பதால், கடலில் மீன்வளம் குறையாதா, கடலை நம்பியிருக்கிற பல ஆயிறக்கணக்கான மீனவர்களின் வாழ்வாராரம் என்னவாகும் என பேசிக்கொண்டிருக்கும்போதே, கைலப்பாகி இருதரப்பும் நடுக்கடலிலேயே அடித்துக்கொண்டனர்.

Advertisment

தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி கீச்சான்குப்பம் மீனவர்களின் விசைப்படகுகளில் தயாராக வைத்திருந்த பாட்டில், கருங்கற்கலைக்கொண்டு வீசி தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் வெள்ளபள்ளம் மீனவர்கள் 6 பேருக்கும், கீச்சாங்குப்பம் மீனவர் 11 பேரும் என 17 பேருக்கு படுகாயம் ஏற்பட்டு நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இரு மீனவ கிராமங்கள் மட்டுமின்றி, கடலோரமுள்ள அனைத்து மீனவகிராமங்களுக்கும் தெரியவர பதற்றம் அதிகமாகிவிட்டது. தாக்குதலை கண்டித்து வேதாரண்யம் பகுதியில் உள்ள வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி, புஷ்பவனம், உள்ளிட்ட 11 மீனவ கிராமத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

 The horrific conflict between fishermen in the Sea

Advertisment

அதோடு பதினோரு கிராமத்தின் சார்பில், நடுக்கடலில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து மீனவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதுடன், அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டைமடி மற்றும் அதிவேக எஞ்சின் கொண்ட படகுகளையும் தடை செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் கொண்ட மனுவை ஆட்சியரிடம் கொடுத்துள்ளனர்.

இவ்வளவு சம்பவம் நடந்த பிறகும் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இனி நாங்களே அத்துமீறி கடலில் இறங்கி தடைசெய்யப்பட்ட வலைகளை கொண்டு மீன் பிடிக்கும் மீனவர்களை நடுக்கடலில் வைத்து மீண்டும் சிறை பிடிப்போம்," என்கிறார்கள் கோபமாக.

நாகை கடலோர காவல்துறையினரிடம் கேட்டோம்,"கீச்சாங்குப்பம் மீனவர்கள் 14 பேர் மீதும் வெள்ளப்பள்ளம் மீனவர்கள் 6 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளோம்."எற்கிறார்கள். "அரசு தடைசெய்யப்பட்ட வலைகளை, மீன்வளத்துறை அதிகாரிகளே அனுமதிப்பதால் வந்த மோதல்தான் இது. நாகை மாவட்டத்தில் பல கிராமங்களில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்திவருகின்றனர். இது அனைத்துமே அதிகாரிகளுக்கு தெரியும், அவர்கள்தான் இதற்கு பொறுப்பேற்கனும்," என்கிறார் அக்கரைப்பேட்டை மீனவர் ஒருவர்.