6 Rameswaram fishermen freed

ராமேஸ்வரம் மீனவர்கள் வங்கக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில் கடந்த ஜனவரி 22 ஆம் தேதி நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 6 பேரை இலங்கைக் கடற்படை கைது செய்திருந்தனர். மேலும் அவர்களின் இரு படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதிக்கே வந்து சிங்களப் படையினர் அத்துமீறி கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

Advertisment

இந்த கைது சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதே சமயம் இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

Advertisment

இந்நிலையில் இது குறித்து விசாரணை நடத்திய பிறகு கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே சமயம் மீனவர்களின் இரு விசைப்படகுகளையும் நாட்டுடைமையாக்கி உத்தரவிட்டுள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.