ADVERTISEMENT

ஆய்வு பெயரில் சுற்றுலா.. பயணிகளை ஏமாற்றும் ரயில்வே துறை...!!!

07:44 AM Dec 09, 2018 | nagendran

ADVERTISEMENT

மண்டபத்தின் நிலப்பகுதியையும் ராமேஸ்வரம் தீவு பகுதியையும் இணைக்கும் விதமாக 1909 ஆம் ஆண்டு ஜெர்மன் பொறியாளரால் நடுக்கடலில் மீது 2.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில் பாலம் அமைக்க சர்வே செய்யப்பட்டு 1912 ஆம் ஆண்டு ரயில் பாலம் அமைக்க பணிகள் தொடங்கி 1914 ஆம் ஆண்டு முதல் ராமேஸ்வரத்தில் இருந்து பிற பகுதிகளுக்கு ரயில் சேவை துவங்கியது.

ADVERTISEMENT

அதனைத் தொடர்ந்து 1964 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதி புயலின் காரணமாக தனுஷ்கோடி அழிந்த நிலையில் பாம்பன் பாலத்தில் பிறந்து மூடக்கூடிய பாலத்தை தவிர மற்ற பகுதி முழுவதும் முற்றிலும் சேதம் அடைந்தது. இந்த நாள் சுமார் மூன்று மாதத்திற்கு ரயில் சேவை நிறுத்தப்பட்ட பின் ரயில்வே பொறியாளர்கள் உடனடியாக சீர்செய்து மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு மீட்டர் கேஜ் பாதையாக இருந்த ரயில் பாதையை அகல பாதையாக மாற்றும் பணிக்காக ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

அப்போது ரயில்வே துறை சார்பாக பாம்பன் பாலத்தை சீர் செய்ய முடியாது ஆகவே அகல ரயில் பாதை மண்டபம் வரை அமைக்கப்பட்டு பின் மண்டபத்திலிருந்து பழைய மீட்டர் கேஜ் பாதையில் ரயில் சேவை நடத்தலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அப்போது ஜனாதிபதியாக இருந்த அப்துல்கலாம் ஐஐடியில் ஆலோசனையுடன் பாலத்தை சீர்செய்து அகல ரயில் பாதை அமைக்க கோரிக்கை விடுத்தார். அதனை எடுத்து பாலம் சரிசெய்யப்பட்டு அகலப் பாதையாக மாற்றப்பட்டது.

அப்போது ஒன்றரை வருடங்களில் பணிகள் முடிக்கப்பட்டு 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி அகல பாதையில் ரயில் சேவை துவங்கி நடைபெற்று வந்தது நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு பலத்த காற்று காரணமாக பாம்பனில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மிதவைக் கப்பல் பாம்பன் பாலத்தில் மோதியது இதனால் இரண்டு வாரத்திற்கு ரயில் சேவை நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் பாலம் சரிசெய்யப்பட்டு ரயில் சேவை தொடர்ந்து இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து 104 ஆண்டுகளை கடந்தும் சிறப்பாக தன்னுடைய பணியை செய்துவந்த பாம்பன் பாலத்தின் பல்வேறு பகுதிகளில் ரயில் தண்டவாளத்தை தாங்கி நிற்கும் இரும்பு கர்டர்கள் சேதமடைந்த நிலையில் அதை ரயில்வே நிர்வாகம் சரி செய்து வருகின்றது ஆனால் திறந்து மூடக்கூடிய பாம்பன் பாலத்தை கடந்த சில வருடங்களாக சரி செய்யப்படாத நிலையில் பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள இரும்புகள் அனைத்தும் உப்புக்காற்றில் அரிப்பு ஏற்பட்டு காற்று வீசும் போது கீழே விழுந்த நிலையில் கடலுக்குச் செல்லும் மீனவர்கள் பணியாளர்களும் ரயில்வே நிர்வாகத்திற்கு பலமுறை தொடர்ந்து தெரிவித்துள்ளனர் ஆனால் புதிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்து சரி செய்ய மறுத்து வந்த நிலையில் பாலும் தற்பொழுது விரிசல் ஏற்பட்டு சேதமடைந்ததால் ராமேஸ்வரத்துக்கு வர வேண்டிய அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது இதனால் மண்டபத்தில் இருந்து பேருந்து மூலமாக பயணிகள் ராமேஸ்வரத்திற்கு வருகின்றனர்.

இந்நிலையில் இப்பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கும் போது மாதத்திற்கு இருமுறை இந்தியன் ரயில்வே உயரதிகாரிகள் ரயில் பெட்டிகளில் தங்கள் குடும்பத்துடன் ராமேஸ்வரத்திற்கு ஆய்வு என்ற பெயரில் வந்து கோவிலுக்கும் தனுஷ்கோடிக்கும் சுற்றிப்பார்த்துவிட்டு பெரிய அளவில் பாம்பன் பாலத்தை திறந்து பார்த்துவிட்டு ஆய்வை முடித்து கொண்டதின் விளைவாக இன்று பாம்பன் பாலம் சேதம் அடைந்து உள்ளது என்றும் இதனால் தமிழர்கள் பாரம்பரியமாக அறிவிக்க வேண்டிய பாம்பன் பாலம் தற்பொழுது செயலிழந்து ரயில் போக்குவரத்து இன்றி காணப்படுவதாகவும் உடனே சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க இந்திய அரசு முன் வர வேண்டும் எனவும் இந்தியா முழுவதும் இருந்து வரக்கூடிய தீர்த்த யாத்திரைக்கு வரக்கூடிய வயதான பக்தர்கள் மிகவும் இன்னல்களை சந்தித்து வருவதால் உடனடியாக பாலத்தை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து பயணிகள் தெரிவிக்கும்போது ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை இல்லை என அறிவிக்கப்பட்ட நிலையில் பயணச்சீட்டு மற்றும் நாங்கள் வரும் இடத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வருகின்றனர் எனவும் கூடுதல் கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு மண்டபத்தில் இறக்கி விடவும் வேதனையுடன் தெரிவித்தனர். ஆகவே உடனடியாக ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவையை காரணத்தைச் சரி செய்யவேண்டும் என ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT