pamban bridge bus incident passengers hospital

Advertisment

பாம்பன் பாலத்தில் அரசுப் பேருந்தும், தனியார் பேருந்தும் மோதி விபத்திற்குள்ளாகின.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பாலத்தில் சென்றுகொண்டிருந்த சுற்றுலா பேருந்தும், அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் தனியார் பேருந்து பாம்பன் பாலத்தின் தடுப்புச் சுவர் மற்றும் விளக்கு கம்பத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் ஐந்து பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

தடுப்புச் சுவரில் மோதி பேருந்து நின்றதால், கடலில் விழாமல் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பயணிகள் அனைவரும் பேருந்தில் இருந்து இறக்கப்பட்ட நிலையில், பேருந்து கடலில் விழுந்து விடாமல் தடுக்க கயிறுக்கட்டிப் பேருந்தை பாலத்தின் நடுப்பகுதிக்கு பொதுமக்கள் இழுத்தனர்.

Advertisment

சுற்றுலாப் பயணிகள், படப்பிடிப்புகள் என எப்போதும், பரபரப்பாக காணப்படும் பாம்பன் பாலத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.