ADVERTISEMENT

அயோத்திக்கு புறப்பட்ட  ராம ராஜ்ஜிய ரத யாத்திரை!

08:55 AM Mar 05, 2019 | nagendran

ADVERTISEMENT

ராமராஜ்ஜியத்தை அமைக்கக் கோரியும் ராமஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் உள்ளிட்ட 5 கோரிக்கைகளை முன் வைத்தும் ஸ்ரீ ராமதாச மிஷன் யுனிவர்சல் ஏற்பாட்டில் ராமராஜ்ய ரத யாத்திரை ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்திக்கு சிவராத்திரியன்று துவங்கியது.

ADVERTISEMENT

ராமேஸ்வரத்திலிருந்து துவங்கிய ரதயாத்திரை தமிழகத்தின் முக்கிய பகுதிகள் வழியாக ஆந்திரா சென்று அதன்பின் மராட்டிய மாநிலத்தின் வழியாக மற்றும் முக்கிய மாநிலங்களுக்கு சென்று ஏப்ரல் 13ஆம் தேதி ராமநவமிக்கு அயோத்தியாவில் செல்ல உள்ளது. இந்த ராம ராஜ்ய ரத யாத்திரை பாரத் சேவா ஆசிரமத்திலிருந்து புறப்பட்டு ராமேஸ்வரத்தின் முக்கிய வீதிகள் வழியாக ராமகிருஷ்ண மடத்தை வந்தடைந்தது. இராமேஸ்வரத்தின் முக்கிய வழியில் வந்த ராமராஜ்ஜிய ரதயாத்திரையை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இதனையடுத்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், " யாத்திரையின் முக்கிய நோக்கம் ராம ராஜ்ஜியத்தை மீண்டும் அமைக்க வேண்டும், ராம ஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்டவேண்டும், பள்ளிப் பாடத்தில் ராமாயணத்தை சேர்க்க வேண்டும் மற்றும் தேசிய வார விடுமுறையாக வியாழக்கிழமையை மாற்ற வேண்டும் உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து யாத்திரை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்ததுடன் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும்" எனவும் தெரிவித்தனர். தேர்தல் நேரத்தில் புறப்பட்டுள்ள ராம ராஜ்ஜிய யாத்திரை பல அதிர்வுகளை உண்டாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT