Skip to main content

நேபாளம் விடும் இராமர் பாணம்! அதிரும் இந்துத்வா சக்திகள் - பேரா முனைவர் வெ.சிவப்பிரகாசம் 

Published on 31/07/2020 | Edited on 31/07/2020

 

nnnn

 

 

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் செஞ்சீனப் படையின் இந்திய தாக்குதலைத் தாண்டி உலகின் ஒரே ஒரு இந்து நாடு நேபாள் என்று அழைக்கப்பட்ட நேபாளின் பிரதமர் சர்மா ஒலி, இந்திய பாரதிய ஜனதா கட்சியின் உயிர் நாடிக் கொள்கையான இந்துத்துவா இராமராஜ்யத்தின் கதாநாயகனான ‘இராமன் ஒரு நேபாளி என்றும், ராமன் பிறந்த அயோத்தி நேபாளில் உள்ளது என்றும் பறைசாற்றி உள்ளார். இதுவே நேபாளம் இந்தியாமீது விட்ட அசுர பாணமாகும்.

 

இராமாயணம் என்பது ஆரிய-திராவிட போராட்டத்தை சித்திரிக்கும் ஒரு கற்பனைக் கதை என்பதை பண்டித நேரு முதல் பல அறிஞர்களும், தலைவர்களும் ஐயமற பேசியும், எழுதியும் வந்துள்ளனர். இப்படி இருக்கையில், உச்ச நீதிமன்றம் உத்தரப்பிரதேசத்தில் உள்ள பைசாபாத் மாவட்டத்தில் உள்ள அயோத்தி இராமர் பிறந்த இடம்’ என்ற இந்துக்களின் நம்பிக்கையை ஏற்று அதற்கு சாதகமாக தீர்ப்பு அளித்தது.

 

மத நம்பிக்கையை அடிப்படையாக கொண்ட தீர்ப்பிற்கு சவாலாக மற்றொரு மத நம்பிக்கை அடிப்படையாகக் கொண்ட, ஆனால் வரலாறு என்ற பேரில், இந்து நாடு எனப்படும் நேபாளத்தின் பிரதமர் சர்மா ஒலி’, இராமன் ஒரு நேபாளி, அவர் பிறந்தது நேபாளத்தில் என்று ஒரு அணுகுண்டை வீசியுள்ளார்.

 

Nepal

 

கே.பி.சர்மா ஒலி கூறுவதாவது, "ஸ்ரீராமன் ஒரு நேபாளி மட்டுமல்ல, அவர் பிறந்த அயோத்தி நேபாளத்தில் உள்ளது என்றும், இன்று பாரதிய ஜனதா அரசு இராமனுக்கு கட்டி வரும் கோவில் உள்ள அயோத்தி ‘போலியானது’. உண்மையான இராமன் பிறந்த அயோத்தி நேபாளில் உள்ளது'' என்றும் ஆணித்தரமாக பேசியுள்ளார். மேலும் நேபாள பிரதம அமைச்சர் கூறுவதாவது, நேபாளத்தின் "பிர்கஞ்ச்' என்ற நிலப்பரப்பிற்கு மேற்கே இராமனின் இராஜ்யம் அமைந்திருந்தது. இன்று இந்தியாவில் இராமர் கோயில் கட்டப்பட்டு வரும் இடமான அயோத்தி உண்மையான பிறப்பிடம் இல்லை. உண்மை இப்படி இருக்க, இந்திய பாஜக அரசானது நேபாளத்தின் கலாச்சார எல்லையை ஆக்கிரமித்துள்ளது என்ற குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார் நேபாள பிரதமர்.

 

மேலும், அண்மையில் நேபாளம் ஒரு புதிய வரைபடத்தை வெளியிட்டு, அதிபரின் ஒப்புதலையும் பெற்று வெளிஉலகிற்கு அறிவித்து விட்டது. இந்தியாவின் எல்லைப் பகுதிகளை எல்லாம் நேபாளம் தனது வரைபடத்தில் இணைத்துள்ளது என்று இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

 

அதேநேரத்தில், கே.பி.சர்மா ஒலி, தன்னைப் பதவியிலிருந்து துரத்த இந்தியா சதிசெய்வதாக குற்றம்சாட்டியுள்ளார். சர்மா ஒலியின் ஆட்சியை சீனா பாதுகாத்து வருகிறது என்று இந்தியா கூறியுள்ளது.

 

Nepal

 

இந்திய புராணங்களில் அதாவது தசாவதாரத்தில் அதாவது பத்து அவதாரத்தில் ஒன்பதாவது அவதாரம் புத்தர்’என்று விஷ்ணு புராணம் குறிப்பிட்டுள்ளது. அதைப்போல இராமரும் பத்தில் ஒரு அவதாரம் என்று பகர்கிறது. உண்மையில் புத்தர் கடவுளைப் பற்றி பேச மறுத்தவர் மட்டுமல்ல, வேத இதிகாச புராணக் கதைகளை நம்ப மறுத்தார். அவைகளை வெறுத்து ஒதுக்கினார். மக்களை மனித நேயத்துடனும், பகுத்தறிவுடனும் வாழ வலியுறுத்தினார். இப்படிப் பட்ட புத்தர் வேத வேள்வி களை எதிர்த்து, உயிர்ப்பலிகளை வெறுத்து புத்த சமயத்தை படைத்தார். இப்படிப்பட்ட மனிதனை விஷ்ணு புராணம், பத்து அவதாரங்களில் 9வது அவதாரம் என்று கூறுகிறது.

 

இந்தப் பின்னணியில் கலைஞர், இராமர் பிறந்தாரா? அவதரித்தாரா? என்று அயோத்தி பிரச்சனையில் கேள்வி கேட்டார். இராமர் பிறந்தார் என்றால் அவர் கடவுள் இல்லை, அவர் மனிதர். அவ்வாறு மனிதர் இல்லையென்றால் அதாவது அவதாரம் என்றால் பிறந்த இடம் என்று ஒன்று இல்லை என்றார், அதற்கு இன்றுவரை பதில் இல்லை. ஆக, அயோத்தியில் பிறந்தார் என்ற மத நம்பிக்கையில் அடிப்படையிலான வாதம். எனவே, நேபாள பிரதமர் கே.பி.சர்மாஒலி, இந்து என்ற முறையில் மத நம்பிக்கையின் அடிப்படையில் ‘இராமர் ஒரு நேபாளி’ என்று கூறுகிறார். புத்தர் பிறந்த இடமான ‘கபிலவஸ்து’ லும்பினி என்ற இடத்தில் உள்ளது.

 

நேபாளத்தில் மாயாதேவிக்கும் சுத்தோதனருக்கும் அரச குடும்பத்தில் புத்தர் பிறந்தார் என்பது வரலாறு. பின்னர், விஷ்ணு புராணத்தில் புத்தர் 9வது அவதாரம் என்று கூறப்பட்டுள்ளதால், புத்தரும், இராமரும் அவதாரங்களே என்பது வரலாறும், புராணமும் கலந்ததாகும். இராமர் நேபாளி என்பதும் குற்றமில்லை என்பதை புத்தர் பிறந்த நேபாளமும், விஷ்ணு புராணமும் நிரூபிக்கின்றன என்றும் நேபாள பிரதமர் கூறுகிறார். நேபாளின் தலைமை அமைச்சர் கே.பி.சர்மாஒலி அவர்கள் பாஜகவைப் போல இராமர் மூலம் தனது நாட்டில் அரசியல் அதிகார சதுராட்டம் செய்து வருகிறார்.

 

இதுநாள்வரை பாஜக சங்பரிவாரங்கள் ராமர் பெயரால் நடத்திவந்த அரசியலுக்கு ஓர் இந்து நாடு விடுத்த சவாலாக இது அமைந்துள்ளது.

 

 

Next Story

ராமர் படம் கொண்ட தட்டில் பிரியாணி; வைரல் வீடியோவால் பரபரப்பு!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Action against the shop owner on Biryani on Ram's paper plate set

டெல்லி ஜகாங்கிர்புரி பகுதியில் பிரபல ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் கடந்த 21ஆம் தேதி அன்று ராமர் உருவம் கொண்ட தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், ‘ராமர் படத்துடன் கூடிய காகித தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படுகிறது. மேலும், அந்தத் தட்டுக்கள் குப்பை தட்டுகளிலும் வீசப்படுவதாக’ காட்டப்படுகிறது.  தூக்கி எறியும் தட்டுகளில் ராமரின் உருவங்களைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, கடையில் பொதுமக்கள் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தகவல் அறிந்ததும் உள்ளூர் மக்களும், பஜ்ரங் தள் உறுப்பினர்களும் அந்தத் தட்டுகளில் பிரியாணி விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, காவல்துறையிலும் புகார் அளித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கடை உரிமையாளரைக் கைது செய்தனர். இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், ‘காகிதத் தட்டுகளின் மூட்டையிலிருந்து ஒன்று அல்லது இரண்டு தட்டுகளில் ராமரின் புகைப்படங்கள் இருந்தன எனக் கூறியுள்ளனர். மேலும் ஜஹாங்கிர்புரி காவல் நிலையம் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது’ எனத் தெரிவித்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மார்க்கெட்டிங் நோக்கத்திற்காக இதைச் செய்தார்களா? அல்லது வேறு எதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story

என்ன பேசினார் ஆ.ராசா? பா.ஜ.க., காங்கிரஸ் கொந்தளிக்க காரணம் என்ன?

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
Congress condemns A. Rasa speech on jai shri Ram
ஆ. ராசா

திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசா, சமீபத்தில் திமுக சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் “இந்தியா ஒரு நாடல்ல; ஒரே நாடென்றால் ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கலாச்சாரம் இருக்க வேண்டும். அதனால் இந்தியா ஒரு துணைக்கண்டம். இங்கு தமிழ் ஒரு தேசம், ஒரு நாடு; மலையாளம் ஒரு மொழி, ஒரு தேசம், ஒரு நாடு; ஒரியா ஒரு மொழி, ஒரு தேசம், ஒரு நாடு; இப்படி பல மொழி பல தேசங்கள் இருக்கின்றன. இத்தனை தேசிய இனங்களையும் ஒன்று சேர்த்தால்தான் இந்தியா. 

தேர்தலுக்குப் பிறகு திமுக இருக்காது என்று பிரதமர் கூறுகிறார். தேர்தலுக்குப் பிறகு திமுக இருக்காது என்றால் இந்தியாவே இருக்காது. பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சட்டம் இருக்காது. அரசியல் சட்டம் இல்லையென்றால், இந்தியா இருக்காது. இந்தியா இல்லையென்றால் தமிழ்நாடு தனியாகப் போய்விடும். 

நீங்கள் சொல்லுகின்ற ஜெய் ஸ்ரீராமையும், ‘பாரத் மாதா கி ஜே’யையும் நாங்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்”என கடுமையாக சாடியிருந்தார். இது சர்ச்சையாக மாறிய நிலையில் பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து பா.ஜ.க மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், “இந்தியாவின் அடையாளத்தை இழிவுபடுத்துவதும், இந்தியர்களின் நம்பிக்கை மற்றும் இந்து கடவுள்களை அவமதிப்பதும் இந்தியா கூட்டணியின் அரசியல் செயல்திட்டமாக மாறி வருகிறது. ஆ. ராசாவின் இத்தகைய கருத்துகளுடன் உடன்படுகிறார்களா? என்பதை காங்கிரஸும், இந்தியா கூட்டணியில் உள்ள பிற கட்சிகளும் சொல்ல வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

Congress condemns A. Rasa speech on jai shri Ram
அமித் மாள்வியா

பாஜக தொழில்நுட்பபிரிவு தலைவர் அமித் மாள்வியா, “திமுகவின் நிலைப்பாட்டில் இருந்து வெறுப்புப் பேச்சுகள் தொடர்ந்து வருகின்றன. சனாதன தர்மத்தை ஒழிப்போம் என உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். தற்போது இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு எதிராக ஆ.ராசா அழைப்பு விடுக்கிறார். கடவுள் ராமைரை கேலி செய்கிறார். மணிப்பூர் மக்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்துகளை கூறுகிறார். இந்தியா ஒரு தேசம் என்ற கருத்தை கேள்விக்குள்ளாக்குகிறார். காங்கிரஸ் கட்சியும் இந்தியா கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளும் அமைதியாக இருக்கின்றன. பிரதமர் வேட்பாளராக அவர்கள் முன்மொழிந்த ராகுல் காந்தியும் மௌனமாக இருக்கிறார்” என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஆ.ராசாவின் காணொளியை பதிவிட்டு அதற்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். 

இந்த நிலையில் ஆ.ராசாவின் கருத்தில் நான் 100 சதவீதம் உடன்படவில்லை என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசும் போது, “ஆ.ராசா கருத்துகளுடன் நான் 100 சதவீதம் உடன்படவில்லை. இந்த இடத்தில் நான் அவரின் பேச்சை கண்டிக்கிறேன். ராமர் அனைவருக்கும் சொந்தமானவர் மற்றும் அனைத்தையும் உள்ளடக்கியவர் என்று நான் நம்புகிறேன். 

Congress condemns A. Rasa speech on jai shri Ram
சுப்ரியா ஷ்ரினே

இமாம்-இ-ஹிந்த் என்று அழைக்கப்பட்ட ராமர் சமூகங்கள், மதங்கள் மற்றும் சாதிகளுக்கு அப்பாற்பட்டவர் என்று நான் நம்புகிறேன்.  ராமர் என்பது வாழ்க்கையின் இலட்சியம், ராமர் என்பது கண்ணியம், ராமர் என்பது நெறிமுறை, ராமர் என்பது அன்பு. அவரது பேச்சை நான் முற்றிலும் கண்டிக்கிறேன். அவருடைய (ராஜாவின்) கூற்றாக இருக்கலாம், நான் அதை ஆதரிக்கவில்லை, நான் அதைக் கண்டிக்கிறேன், மக்கள் பேசும்போது நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் உதயநிதி சனாதன தர்மம் குறித்து பேசிய போது இந்தியா கூட்டணியில் சர்ச்சை எழுந்த நிலையில், ஆ.ராசாவின் பேச்சு மீண்டும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.