Skip to main content

தொடரும் கைது நடவடிக்கை; அதிர்ச்சியில் தமிழக மீனவர்கள்

Published on 29/10/2023 | Edited on 29/10/2023

 

Tamil Nadu fishermen in shock for Proceedings of srilanka

 

ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீன்பிடித் துறைமுகத்தில் கடந்த 14 ஆம் தேதி விசைப் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். இவர்கள் கச்சத்தீவு - தனுஷ்கோடி இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அப்போது அங்கு ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி சட்டவிரோதமாக மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் 27 பேரைக் கைது செய்தனர். மேலும் 5 படகுகளையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து மீனவர்கள் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

முன்னதாக கைது செய்யப்பட்ட மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் அக்டோபர் 27 ஆம் தேதிக்குள் விடுவிக்காவிட்டால் நவம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள மீனவர்களை ஒன்றிணைத்து மண்டபத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவோம் என ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்திருந்தனர். இந்த சூழலில் மீனவர்கள் 15 பேருக்கு வரும் 9 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளதால், திட்டமிட்டபடி ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என மீனவர் அமைப்புகள் தெரிவித்திருந்தன.

 

இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் ராமேஸ்வரம் மீனவர்கள் தலைமன்னாருக்கும் கச்சத்தீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 16 பேரைக் கைது செய்தனர். அவர்களின் இரு படகுகளையும் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று மாலை 6 மணியளவில் எல்லைத் தாண்டி மீன்பிடித்தாகக் கூறி மேலும் 2 படகுகளில் இருந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அதுமட்டுமின்றி மீனவர்களின் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. இதையடுத்து மீனவர்கள் 14 பேரும் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்