ADVERTISEMENT

சரியான தண்டனை - "பளார்" விவகாரத்தில் இராமதாஸ் கருத்து!

04:22 PM Mar 28, 2022 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை 'கிங் ரிச்சர்ட்' படத்திற்காக வில் ஸ்மித் பெற்றுள்ளார். இந்த படம் வில்லியம்ஸ் சகோதரிகளின் தந்தையின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இதில் வீனஸ்-செரினா வில்லியம்ஸ் சகோதரிகளின் தந்தையாக நடித்த வில் ஸ்மித் சிறந்த நடிகருக்கான விருதை தட்டி சென்றார்.

இவ்விழாவில் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித்தும் கலந்துகொண்டார். ஜடா பிங்கெட், அலோபீசியா என்ற ஒருவகை நோயால் பாதிக்கப்பட்டு, அதனால் ஏற்பட்ட முடிஉதிர்வால் மொட்டை அடித்துள்ளார். இந்நிகழ்ச்சியின் போது ஜடா பிங்கெட் ஸ்மித்தின் முடியில்லா தலையை "ஜி.ஐ. ஜேன்" படத்தில் டெமி மூரின் மொட்டை அடிக்கப்பட்ட தோற்றத்துடன் ஒப்பிட்டு தொகுப்பாளர் கிரிஸ் ராக் கிண்டலடித்தார்.

இதை கேட்ட வில் ஸ்மித் உடனே இருக்கையில் இருந்து எழுந்து, ஆஸ்கர் மேடை ஏறி தொகுப்பாளர் கிரஸ் ராக்கை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அதன் பின் அமைதியாக தனது இருக்கையில் அமர்ந்த வில் ஸ்மித் "என் மனைவி குறித்து இனி உன் வாயிலிருந்து வார்த்தை வரக்கூடாது" என காட்டமாக தெரிவித்தார்.



இந்த சம்பவம் உலகளவில் வைரலாகி வரும் நிலையில் வில் ஸ்மித்-க்கு ஆதரவாக பலரும் தங்களுடைய ஆதரவை இணையதளம் வாயிலாக தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பாமக நிறுவனர் இராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். அதில், " ஒருவரின் உடல்குறையை நகைச்சுவைக்கான கருப்பொருள் ஆக்காதீர்கள், மனைவியையும் அவரின் உணர்வையும் மதித்தால் உலகம் உங்களை மதிக்கும் என்ற இரண்டு உண்மைகளை சொல்லியுள்ளது இந்த நிகழ்வு" என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT