சென்னையில் ஊரடங்கை மீறி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருப்பது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

Advertisment

ramadoss

அதில், சென்னை அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு இரு சக்கர வாகனங்களும், மகிழுந்துகளும் விரைகின்றன. சென்னை என்ன கரோனா காலத்து சுற்றுலா தலமா? ஊரடங்கை மதிக்காவிட்டால் சென்னை இன்னொரு நியூயார்க்காக மாறிவிடும்... எச்சரிக்கை!

Advertisment

தமிழகத்தின் 23 ஹாட்ஸ்பாட் மாவட்டங்களில் சென்னைதான் முதலிடம். 10 மாவட்டங்களின் மொத்த பாதிப்பைவிட அதிகமாக சென்னையில் 303 பேர் பாதித்திருக்கிறார்கள். அதன்பிறகும் பொறுப்பின்றி மக்கள் ஊர் சுற்றினால், அதை காவல்துறை அனுமதித்தால் கரோனாவிடமிருந்து சென்னையை யாராலும் காப்பாற்ற முடியாது!

 nakkheeran app

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் போல வாகனங்கள் அணிவகுப்பதை காவல்துறையால் கட்டுப்படுத்த முடியாதா? அதிக கட்டமைப்பு கொண்ட போக்குவரத்து காவல்துறையால் அனைத்து சாலைகளிலும் சோதனைச்சாவடிகளை அமைக்க முடியாதா? அதையும் மீறும் அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்ய முடியாதா?

Advertisment

சென்னையில் ஊரடங்கை மீறிய போக்குவரத்தை கட்டுப்படுத்த காவல்துறை தவறியது கண்டிக்கத்தக்கது. ஊரடங்கை செயல்படுத்தியதில் சபாஷ் வாங்கிய சென்னை காவல்துறைக்கு திடீர் சோர்வு, சுணக்கம் ஏன்? ஒருவேளை ஊரடங்கை தளர்த்த காவல்துறைக்கு ரகசிய ஆணை வந்திருக்கிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.