pmk

Advertisment

தமிழகத்தில் இருக்கும் பல மாவட்டங்கள் மற்றும் ஊர்களின் பெயர் தமிழ் மொழியில் இருந்தாலும் ஆங்கிலத்தில் அதன் பெயர்களைக் குறிப்பிடும் போது சரியான தமிழ் உச்சரிப்பிற்கு நேர்மாறாக உள்ளது. இதனையடுத்து தமிழில் அதன் ஊர்ப் பெயர்களை உச்சரிப்பது போலவே ஆங்கிலத்திலும் அதன் பெயர்கள் மாற்றப்படுவதற்கான அரசாணையைதமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி ஊர்கள் மற்றும் மாவட்டங்களின் பெயரை இரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் பெயர்ப் பலகைகளிலும் மாற்றப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

Advertisment

இந்த நிலையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்த அரசாணைக்குக் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், தமிழ்நாட்டில் 1,018 ஊர்களின் பெயர்கள் தமிழ் உச்சரிப்புக்கு இணையான ஆங்கில உச்சரிப்புக்கு மாற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இந்தியா விடுதலை அடைந்து 73 ஆண்டுகளாகியும் இன்னும் விலகாத ஆங்கிலத் தன்மையை விரட்டும் இந்த முயற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.