ADVERTISEMENT

எந்த தொகுதியில் நின்றாலும் ராஜேந்திர பாலாஜிக்கு தோல்வி உறுதி! - அதிமுக எம்.எல்.ஏ பேச்சு!

04:00 PM Dec 21, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எந்தத் தொகுதியில் நின்றாலும் வெற்றிபெற மாட்டார் என்று அதிமுக எம்.எல்.ஏ தெரிவித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சைக்குப் பெயர் போன அதிமுக அமைச்சர் என்றால் முதலில் நினைவுக்கு வருபவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. விருதுநகர் மாவட்டம் சிவகாசி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக அவர் இருந்து வருகிறார். அவருக்கும் அதே மாவட்டத்தில் உள்ள சாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மனுக்கும் எப்போது ஏழாம் பொருத்தம். இருவரும் கட்சி நிகழ்ச்சிகள் உட்பட அனைத்திலும் சண்டையிடுவார்கள். இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த எம்.எல்.ஏ ராஜவர்மன், "வரும் தேர்தலில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எந்தத் தொகுதியில் நின்றாலும் வெற்றிபெற மாட்டார், அவர் எனக்குக் கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ என்னிடம் இருக்கிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT