ADVERTISEMENT

ஈரோட்டில் மழை... குண்டும் குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி! 

09:06 AM Oct 17, 2019 | kalaimohan

ஈரோடு உட்பட ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தபடி மழை பெய்ய தொடங்கியுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

நேற்று காலை 11 மணி முதல் தொடர்ந்து ஈரோடு மாவட்டம் முழுக்க மழை பெய்து கொண்டே உள்ளது. இதனால் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், பணிபுரியும் ஊழியர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். குறிப்பாக ஈரோடு நகர் பகுதியில் பாதாளசாக்கடை கூட்டு குடிநீர் திட்டம், மின்சார கேபிள் என ஈரோடு முழுக்க சாலைகளை மாநகராட்சி நிர்வாகம் தோண்டி போட்டுள்ளனர். ஒவ்வொரு வீதியும் குண்டும் குழியுமாக இருக்கிறது.

நேற்று பெய்த மழையில் மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதில் ஏற்கனவே தோண்டப்பட்ட பள்ளங்கள் குழிகள் மழை நீரால் சூழப்பட்டது. வாகன ஓட்டிகள் சாலையில் உள்ள பள்ளங்களை தெரியாமல் வாகனம் ஓட்டி வந்ததில் பலர் குழிக்குள் விழுந்து எழுந்து காயத்துடன் சென்றனர். கார் உட்பட நான்கு சக்கர வாகனங்களும் குழிகளில் இறங்கி விபத்துக்குள்ளாகினார்கள். தொடர்ந்து கனமழை வருகிற 18ம் தேதி வரை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது இந்த மழையால் மாவட்டம் முழுக்க நிலத்தடி நீர் சேமிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT