ADVERTISEMENT

எடப்பாடி பழனிசாமியின் உதவியாளருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு! 

10:29 AM Oct 22, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த அதிமுக அரசின் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் உதவியாளரும், மத்திய கூட்டுறவு வங்கியின் மாநில தலைவராகவும் இருந்த இளங்கோவன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று (22.10.2021) திருச்சியில் 4 இடங்களில் அதிரடியாக சோதனை செய்துவருகின்றனர்.

இளங்கோவன், தன் மகன் பிரவீன் பெயரில் கடந்த 2016இல் சுவாமி அய்யப்பன் கல்வி அறக்கட்டளை என்ற பெயரில் திருச்சி முசிறியில் துவங்கி நடத்திவந்தார். இந்த அறக்கட்டளையின் கீழ் பாலிடெக்னிக் மற்றும் வேளாண்மை கல்லூரி செயல்பட்டுவருகிறது. மேலும் இளங்கோவன், கடந்த 2013ஆம் ஆண்டு மத்திய கூட்டுறவு வங்கியின் சேர்மேனாக இருந்தவர், மீண்டும் 2018இல் சேர்மேனாக மீண்டும் அதே பதவிக்கு வந்தார்.

கடந்த 2014க்கு முன்பு வரை இளங்கோவனின் சொத்து மதிப்பு 1 கோடியே 52 லட்சத்து 65 ஆயிரத்து 540 ரூபாயாக இருந்த நிலையில், கடந்த ஏப்ரல் 2014 முதல் மார்ச் 2020 வரை 3 கோடியே 78 லட்சத்து 31 ஆயிரத்து 755 ரூபாய் என்ற அளவிற்கு அவருடைய மகன், உறவினா்கள், நண்பா்கள் உள்ளிட்டவா்கள் பெயர்களில் சொத்துகள் வாங்கி குவித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து அவருக்கு சொந்தமான இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். அதில் முசிறி எம்.இ.டி. பாலிடெக்னிக் கல்லூரியை நிர்வகித்துவரும் பிரவீன்குமாரும் இதில் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தொடர்ந்து சோதனை நடைபெற்றுவரும் நிலையில், இன்று மாலை முழுவிவரங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT