ADVERTISEMENT

’மோடி போல 15 லட்சம் கொடுப்பேன் என்று பொய் சொல்ல மாட்டேன்; 3,60,000 ரூபாய் நான் கொடுப்பேன்’ தேனி பிரச்சாரத்தில் ராகுல்காந்தி 

11:27 PM Apr 12, 2019 | sakthivel.m

ADVERTISEMENT

தேனி மாவட்ட நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனையும், பெரியகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணன் குமாரையும் ஆண்டிபட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜாவையும் ஆதரித்து ஆதரித்து பிரச்சாரம் செய்ய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி
தேனிக்கு வந்தார்.

ADVERTISEMENT

தேனி அருகிலுள்ள அன்னஞ்சிவிளக்கில் அமைக்கப்பட்டுள்ள பிரச்சார மேடைக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்த ராகுலை பார்த்து கூட்டத்திற்கு பெருந்திரளாக வந்த காங்கிரஸ் கட்சி தொண்டர்களும் பொதுமக்களும் வருங்கால பிரதமர் ராகுல் வாழ்க வாழ்க என கோஷம் போட்டனர். ஆனால் போலீசார் வேண்டுமென்றே பிரச்சாரக் கூட்டத்திற்கு முன் பகுதியில் பொதுமக்கள் வர கட்டுப்பாடு விதித்ததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்களும் கட்சிக்காரர்களும் அந்த கட்டுப்பாட்டை தளர்த்தி விட்டு முன் வரிசையில் வந்து அமர்ந்தனர்
.

இந்த தேர்தல் பிரச்சாரத்தில் கழகத் துணை பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஐ. பெரியசாமி கலந்து கொண்டு பேசும்போது... இந்தியாவிலேயே அடுத்த பிரதமர் ராகுல் என்று முதன்முதலில் குரல் கொடுத்தவர் தலைவர் ஸ்டாலின். அதுபோல் இந்த தேர்தல் மூலம் ராகுல் காந்தி பிரதமராக வருவார். அதன்பின் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் மூலம் தலைவர் ஸ்டாலின் முதல்வராக வருவார் என்று கூறினார்.


அதைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் தேனி பாராளுமன்ற வேட்பாளருமான ஈவிகேஎஸ் இளங்கோவனோ‌..
மத்தியில் ராகுல் தான் பிரதமர் தமிழ்நாட்டில் ஸ்டாலின் தான் முதல்வர். அதனால இந்த ஓபிஎஸ் இபிஎஸ் யும் வீட்டுக்கு அனுப்ப வரக்கூடிய பாராளுமன்றத் தேர்தலில் எனக்கு கை சின்னத்திலும் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் சரவணகுமாருக்கும் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டி போடும் மகாராஜனுக்கும் உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கூறினார்.

இறுதியாக பேசியதலைவர் ராகுல்காந்தியோ... காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை ஒரு தனி மனிதனின் குரல் அல்ல. ஒட்டுமொத்த தேசத்தின் குரல். தனி மனிதன் தயாரித்தது அல்ல. சமூகத்தின் பல அடுக்குகளில் உள்ள அனைவரும் இணைந்து கலந்து பேசி உருவாக்கப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் கொண்டாடுகிறார்கள் என்றால், அதனை தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக பார்க்கிறார்கள். தேசத்தின் குரல். நீட் தேர்வை தமிழகத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும், எப்படிப்பட்ட தேர்வு முறை வேண்டும் என்று என்னிடம் சொன்னார்கள். நான் கேள்விப்பட்டேன், அனிதா என்ற மாணவி, நீட் தேர்வு மூலம் தற்கொலை செய்துகொண்டார். தேர்தல் அறிக்கையில் ஒரு வரி இருக்கும். அது அனிதாவிற்கு அஞ்சலி செலுத்தவே அந்த ஒரு வரி சேரக்கப்பட்டது. அந்த வரி, அனிதாவிற்கு அஞ்சலி செலுத்தவே சேர்க்கப்பட்டது.

நீட் தேர்வு வேண்டுமா, வேண்டாமா என தமிழ்நாடு முடிவு செய்துகொள்ளட்டும். தமிழகத்தை நிர்பந்தம் செய்ய முடியாது. எங்கள் தேர்தல் அறிக்கையில் இது போன்ற பல்வேறு உதாரணங்கள் உள்ளன. மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களின் நலன் சார்ந்து இருக்கிறது. நியாய் என்ற திட்டம். காங்கிரஸ் கட்சி நாட்டிற்கு செய்ய இருக்கும் திட்டம் தான் அது.

மோடி, பல்லாயிரம் கோடி ரூபாயை 15 கோடீஸ்வரர்களுக்கு கொடுக்கிறது. நாங்கள் 25கோடி மக்களுக்கு பணத்தைக் கொடுப்போம். 3 1/2 பைசா தான் ஏழை மக்களுக்கு கொடுக்கிறது மோடி அரசு. ஆனால், நாம், 20 விழுக்காடு மக்களுக்கு 72 ஆயிரம் ரூபாயை காங்கிரஸ் கொடுக்க இருக்கிறது. வருடத்திற்கு 3,60,000 ரூபாயை கொடுக்க இருக்கிறோம். மோடி போல 15 லட்சம் கொடுப்பேன் என்று பொய் சொல்ல மாட்டேன். 3,60,000 ரூபாய் நான் கொடுப்பேன். பொருளாதாரத்தை பாதிக்காது. மேலும் வலுவாக்கும்.


மோடி, பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி விதித்து, உங்கள் பைகளில் உள்ள பணத்தை எடுத்துக்கொண்டார். கையில் உள்ள பணத்தை வங்கியில் செலுத்தச்சொல்லி மக்களையும், வியாபாரிகளையும், விவசாயிகளையும் வதைத்தார். 5 வகையான கொடுமையான வரியை நாட்டு மக்களிடம் விதித்து, பல பாரங்களை பூர்த்தி செய்யச்சொல்லி, 28 விழுக்காடு வரியை மக்களிடம் விதித்தார். பணத்தை உங்களிடம் இருந்து எடுத்து, நீரவ்மோடி, மல்லையா போன்ற மோடியின் நெருங்கிய நண்பர்களிடம் கொடுத்தார். மக்கள் வாங்கும் சக்தியை இதனால் இழந்தார்கள். தொழிற்சாலைகள் உற்பத்தியை நிறுத்தி, ஒருகட்டத்தில் மூடினார்கள். இதனால், வேலைவாய்ப்பு இல்லாமல் போனது. திருப்பூர், காஞ்சிபுரம் இன்று மோடியால் முழுவதும் முடங்கியுள்ளது.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் மூடப்பட்ட தொழிற்சாலைகள் அனைத்தும் இயங்கும். மோடியைத் தவிர. மோடி எப்போது மகிழ்ச்சியாக இருப்பார் என்றால், கோடிகளை எடுத்து கோடீஸ்வரர்களிடம் கொடுக்கும் போது தான். மக்களிடையே வெறுப்பு அரசியலை விதைக்கிறார் மோடி. நாங்கள் அன்பை உள்ளடக்கிய அரசியலை செய்கிறோம். நாங்கள் எல்லோரும், ஒற்றுமையாக இருக்கும் போது, மோடி சக்தி இழந்துவிடுவார். நாம், வெறுப்பு அரசியல் மூலமாக, அவரின் வெறுப்பு"அரசியலை எதிர்க்கப்போவதில்ல. அன்பு, மரியாதை போன்ற அரசியல் மூலமாக எதிர்க்க இருக்கிறோம்.

டெல்லியில் இருந்துகொண்டு தமிழ்நாட்டை இயக்கலாம் என்று நினைக்கிறார். அவர் நினைப்பதை இங்கு நிறைவேற்ற முடியும் என்று நினைக்கிறார். தமிழத்தைப் பற்றியும், தமிழின் தொன்மையையும், இனிமையும் பற்றி தெரியாது. பெரியாரின் புத்தகத்தை அவருக்கு கொடுக்க விரும்புகிறேன். பிறகாவது தமிழ்நாட்டைப் பற்றி அவர் புரிந்துகொள்வார். பிறகு கலைஞர் கருணாநிதியின் புத்தகத்தை கொடுப்பேன். தமிழக மக்கள் தங்கள் வரலாற்றை அவர்களே நிர்ணயிக்கிறார்கள். மோடி ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் விரும்பாததை அவர்களை செய்ய வைக்க முடியாது. தமிழக மக்களை தொடர்ந்து அவமதிப்பதை நாங்கள் பொறுத்துக்கொள்ள முடியாது.


தமிழக விவசாயிகள் டெல்லியில் போராடியதை நான் பார்த்தேன். நேரில் பார்த்து அவர்களை தழுவிக்கொண்டேன். நான் உங்களோடு நிற்கிறேன் என்றேன். நாங்கள் ஆட்சியில் இருக்கும் அனைத்து மாநிலத்திலும் விவசாய கடனை ரத்து செய்திருக்கிறோம். ஆனால், மோடி, 3லட்சம் கோடி ரூபாய், 15கோடீஸ்வரர்களின் கடனை தள்ளுபடி செய்தார். 2019தேர்தல் முடிந்த பிறகு, விவசாயிகளுக்கு நன்மை செய்வோம், விவசாயிகள் தன்னம்பிக்கையோடு வாழ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் உங்களோடு இருக்கிறோம்.

எங்களின் முதல் நிதி நிலை அறிக்கையில், பிரத்யோக விவசாய நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வோம். ஒவ்வொரு விவசாயிகளுக்கும் அவர்களுக்கு என்ன செய்ய இருக்கிறோம் என்பதை முன்னரே சொல்வோம். அதில் நாங்கள் குறைந்தபட்ட ஆதாரவிலை மற்றும் ஊக்கத்தொகை எவ்வளவு என்று முன்னரே சொல்லிவிடுவோம்.


உலகத்தில் உள்ள மிகச்சிறந்த தொழில்நுட்பங்களை அந்த அறிக்கையில் குறிப்பிடுவோம். 45,000 கோடி, அனில் அம்பானி கடன் வாங்கிக்கொண்டு இருக்கிறார். ஆனால், விவசாயி, 20ஆயிரம், 40ஆயிரம் கடன் வாங்கி கட்டமுடியவில்லை என்றால், பிடித்து ஜெயிலில் அடைக்கிறார்கள். எனவே, அந்த முறையை நாங்கள் மாற்ற இருக்கிறோம். 2019 தேர்தலுக்குப் பிறகு. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், விவசாயி கடனை கட்டமுடியவில்லை என்றால், சிறைக்குச் செல்ல மாட்டார். அதிகாரி, சிறையில் அடைத்தால், அந்த அதிகாரிக்கு குற்றவியல் சட்டப்பட்டி தண்டனை கொடுப்போம்.

இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள். பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்ற நடவடிக்கை பாதித்திருக்கிறது. மத்திய அரசின் 22லட்சம் காலியிடம் உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், முதல் ஓராண்டிற்குள், அந்த காலியிடம் நிரப்பப்படும்.

பட்டியலின மக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும். பஞ்சாயத்துகளில் 10லட்சம் காலிப்பணியிடம் உள்ளது.

இளைஞர்கள் தொழில் தொடங்க வேண்டும் என்றால், அரசு அலுவலகங்களுக்கு அழைந்து திரிய வைண்டும். லஞ்சம் கொடுக்கவேண்டும். ஆனால், 2019ற்கு பிறகு, எந்த இளைஞனும் எந்த அரசு அலுவலகத்திற்கும் சென்று அனுமதி பெறவேண்டியதில்லை. லஞ்சம் கொடுக்க வேண்டாம். மூன்று ஆண்டுகள் வெற்றிகரமாக அந்த தொழிலை நடத்திய பிறகு அனுமதி பெற்றுக்கொள்ளலாம்.

தமிழகத்தின் எதிர்காலத்தை தமிழர்களே நிர்ணயிப்பார்கள். இந்த கூட்டணி அரசியல் கூட்டணி மட்டுமல்ல, மிகப்பெரிய காரியத்தை செய்து காட்ட வேண்டும் என்பற்கான கூட்டணி.


72ஆயிரம் பணம், அந்த குடும்பத்தின் பெண்களின் பெயரில் தான் வரவு வைக்கப்படும். நாடாளுமன்றத்தின் இரு சபைகளில் 33% இட ஒதுக்கீடு பெண்களுக்கு கொடுக்கப்படும். மத்திய அரசுப்பணியிடங்களில் 33% பெண்களுக்காக ஒதுக்கப்படும். எப்போது தமிழகத்திற்கு வந்தாலும், நீங்கள் காட்டும் அன்பும், பாசமும் என்னை உற்சாகத்தோடு திருப்பிச்செல்ல வைக்கிறது.!" என்று கூறி தனது உரையை முடித்தார் ராகுல்காந்தி. அவரின் ஆங்கிலப் பேச்சை பீட்டர் அல்போன்ஸ் மொழிபெயர்த்தார்.


உடன், முன்னாள் தேனி எம்.பி., ஆரூண், தமிமுன் அன்சாரி, தி.மு.க'வின் ஐ.பெரியசாமி, மற்றும் பெரியகுளம் தி.மு.க வேட்பாளர் சரவணகுமார்., ஆண்டிபட்டி தி.மு.க வேட்பாளர் மகாராஜன் ஆகியோருடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநில பொறுப்பாளர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT