congress

மத்திய பா.ஜ.க. அரசு சமீபத்தில் நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் மாநாட்டை தேனி - போடி சாலையில் நாளை திங்கட்கிழமைபோராட்டம்நடத்துவதென தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மற்றும் தேனி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்திருக்கிறது.

Advertisment

இந்த மாநாட்டில் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் அழகிரி மற்றும் , சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி, நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் பலர் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட் டிற்காக டிராக்டர்கள் அணிவகுப்பு நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை காவல்துறையினர் அனுமதியோடு செய்வதற்கான முயற்சியில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் அசன் மௌலானா மற்றும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.பி.முருகேசன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

Advertisment

இந்தநிலையில் நடைபெறவுள்ள மாநாட்டை முடக்குகிற வகையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பு அதிகாரி சாய்சரண் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். விவசாயிகள் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி தரமுடியாது, டிராக்டர்கள் பங்கேற்க கூடாது என்று விவசாயிகளை காவல்துறையின் மூலம் மிரட்டி அச்சுறுத்துகிறார். இவரது அராஜக போக்கு காரணமாக பதற்ற மான சூழல் உருவாகியுள்ளது.

இது சம்பந்தமாக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், அதிமுக நிறுவிய 49 ஆம் ஆண்டு விழாவையொட்டி தேனி மாவட்ட செயலாளர் சையதுகான் நூற்றுக்கணக்கான கார்களுடன் அணி வகுத்து பயணம் மேற்கொண்டதை தடுக்க காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. அதுபோல் பல்வேறு பொது இடங்களில் அ.தி.மு.க. கொடி ஏற்றவும், டிஜிட்டல் பேனர்கள் வைக்கவும் அனுமதி வழங்கியிருக்கிறார். இவற்றையெல்லாம் தடுக்காத மாவட்ட காவல்துறையினர் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பங்கேற்கிற கூட்டத்திற்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி நடத்தவிடாமல் செய்வதற்கான தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்மாவட்ட காவல்துறை அதிகாரி. அ.தி.மு.க.வுக்கு ஆதரவாகவும், காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும், செயல்பட்டு வருவதை வன்மையாக கண்டிக்கிறேன்.

Advertisment

எஸ்.பி. சாய்சரண் தனது பாரபட்ச போக்கை உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும். அ.தி.மு.க.வுக்கு எப்படி விழா கொண்டாட அனுமதி அளித்தாரோ, அதேபோல விவசாயிகள் கூட்டம் நடத்துவதற்கு தமிழ் நாடு இளைஞர் காங்கிரசுக்கு அவர் அனுமதி அளிக்க வேண்டும் அப்படி அனுமதி அளிக்க தவறினால் தடையை மீறி விவசாயிகள் கூட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை எச்சரித்து கண்டன அறிக்கை விட்டு இருக்கிறார். இது தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.