ADVERTISEMENT

பேருந்தில் பணத்தைத் தவறவிட்ட பெண்... ஒப்படைத்த அரசு பேருந்து நடத்துநர்!

11:18 PM Sep 15, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT


சிகிச்சைக்காக மகளை அழைத்து மருத்துவமனைக்குப் பேருந்தில் சென்ற பெண் தவறவிட்ட பணத்தைப் பேருந்து திரும்பி வரும் போது ஒப்படைத்த அரசு பேருந்து நடத்துனரைப் பயணிகள் பாராட்டினார்கள்.

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது மகளுக்கு மருத்துவம் பார்க்கப் பட்டுக்கோட்டை மருத்துவமனைக்குச் செல்ல கொத்தமங்கலத்திலிருந்து 17- ம் நம்பர் நகரப் பேருந்தில் ஏறி கீரமங்கலத்தில் இறங்கி பட்டுக்கோட்டை செல்லும் தனியார் பேருந்தில் ஏறி சில கி.மீ. சென்ற நிலையில் டிக்கெட் எடுக்கப் பணத்தைத் தேடிய போது பணம் மற்றும் மருந்துச்சீட்டு இருந்த மணிப்பர்சை காணவில்லை. அழுதுகொண்டே நடுவழியில் நகரம் சன்னதி சாலையில் இறங்கி நின்றனர். அவர்களது அழுகையைப் பார்த்து அந்த வழியாகச் சென்ற நகரம் லெனின் அவர்களிடம் விசாரித்து வழிச் செலவுக்குப் பணம் கொடுத்துச் சென்றுள்ளார்.

சிறிது நேரத்தில் தனது கணவருக்கு போன் மூலம் தகவல் சொல்லிவிட்டு கீரமங்கலம் பேருந்து நிலையத்திற்கு நடந்து வந்து அழுது கொண்டிருந்த போது அறந்தாங்கி சென்ற 17-ம் நம்பர் நகரப் பேருந்து திரும்பி வந்தது. பேருந்து ஓட்டுநர் கொத்தமங்கலம் ஜெயராஜிடம் சென்று மணிப்பர்ஸ் கிடந்ததா என்று கேட்க அருகில் நின்ற நடத்துனர் மணிப்பர்சில் என்ன இருந்தது என்று கேட்க ரூபாய் 4,200 பணம் மற்றும் மகளுக்கு மருத்துவம் பார்த்த மருந்து சீட்டு இருந்ததாகக் கூற அதைச் சரிபார்த்த நடத்துநர் அந்த மணிப்பர்சை உரியவரிடம் கொடுத்தார். பணத்தை கொடுத்த ஓட்டுநர், நடத்துன்ருக்கு கண்ணீர் மல்க நன்றி கூறிய அந்தப் பெண் மகளை அழைத்துக் கொண்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றார். இந்த சம்பவத்தைப் பார்த்த சக பயணிகளும் அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனரின் செயலைப் பார்த்து பாராட்டினார்கள்.

இது குறித்து நடத்துனர் கூறும் போது, "அந்த தாயும், மகளும் கொத்தமங்கலத்தில் ஏறி கீரமங்கலத்தில் இறங்கினார்கள். நிறையப் பயணிகள் இறங்கிப் போன பிறகு பேருந்தில் ஏறிய குளமங்கலம் மூதாட்டி இந்த மணிப்பர்சை எடுத்து யாருடையது என்று கேட்டுக் கொண்டிருந்தார். அதை வாங்கி வைத்திருந்தோம். இப்ப மணிப்பர்சை தொலைத்தவர்களே கண்ணீரோடு வந்து கேட்ட போது அதற்குள் என்ன இருந்தது என்பதை உறுதி செய்து கொண்டு உரியவரிடமே ஒப்படைத்தோம். அவர்களும் சந்தோசமாக மகளைச் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். தொலைத்தவர்களிடமே பணத்தைத் திருப்பி கொடுத்தது எங்களுக்கும் நிம்மதியாக உள்ளது" என்றார்.


நாணயமாக அரசு பேருந்து ஊழியர்களை நாமும் பாராட்டுவோம்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT