/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rummy4343.jpg)
ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்த பவானி என்ற பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம், மணலி அருகே உள்ள புதுநகரில் ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் பணத்தை இழந்த பவானி என்ற பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில், கந்தன்சாவடியில் பணியாற்றி வரும் பவானி, தினமும் ரயிலில் செல்லும்போது, ஆன்லைனில் ரம்மி விளையாடியதாகவும், பல இடங்களில் கடன் பெற்று விளையாடி வந்ததும் தெரிய வந்துள்ளது. பணத்தை இழந்ததால் ஏற்பட்ட மனஉளைச்சலில் அவர் தற்கொலை செய்துக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
திருமணமான ஆறு ஆண்டுகளில் தற்கொலை செய்துக் கொண்டிருப்பதால், இவரது மரணம் தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடைபெறும் எனவும், காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)